ஒரே ஒரு எஃப் ஐஆர் போட்டால் வாழ்க்கையே போய்விடும்... ரஜினிகாந்த் எச்சரிக்கை..!

Published : Feb 05, 2020, 11:31 AM IST
ஒரே ஒரு எஃப் ஐஆர் போட்டால் வாழ்க்கையே போய்விடும்... ரஜினிகாந்த் எச்சரிக்கை..!

சுருக்கம்

சிஏஏ-வால் இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை . அரசியல்வாதிகள் தங்களது லாபத்துக்காக தூண்டி விடுகின்றனர் என ரஜினிகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.  

சிஏஏ-வால் இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை . அரசியல்வாதிகள் தங்களது லாபத்துக்காக தூண்டி விடுகின்றனர் என ரஜினிகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’என்.பி.ஆர் முக்கியம் அவசியம். சிஏஏ விவகாரத்தில் பீதி கிளப்பி விட்டுள்ளனர்.  பிரிவினையின் போது செல்லாமல் இங்கேயே தங்கி விட்ட இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.  மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தினால் தான் வெளிநாட்டினர் யார் என்பது தெரியும். 

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை தர வேண்டும்.  நான் நேர்மையாக வரி செலுத்துகிறேன். சட்ட விரோதமாக எந்தத் தொழிலும் செய்யவில்லை. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பேசியதற்காக எனக்கு இன்னும் சம்மன் வரவில்லை. வந்தால் ஆஜராகி விளக்கம் அளிப்பேன். மாணவர்கள் ஆராய்ந்து போராட வேண்டும். மாணவர்களுக்கு ஒன்றே ஒன்று கூறிக்கொள்கிறேன்; தீர விசாரித்த பின் போராட்டத்தில் ஈடுபடுங்கள் அரசியல்வாதிகள் உங்களை பயன்படுத்தி கொள்வார்கள்.  

உங்கள் மீது எப்ஐஆர் போட்டால் வாழ்க்கையே போய்விடும். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கொடுக்க வேண்டும் என்றுதான் எனது விருப்பம். இலங்கையிலிருந்து அகதிகளாக இங்கு வந்து வாழ்வோருக்கு இந்த குடியுரிமை அவசியம். ஆனால், சோழர் காலத்திலிருந்து இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்து உள்ளனர். அங்கு வாழும், அவர்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும் என கேட்க வேண்டாம். அவர்கள் அங்கேயே இருக்கட்டும். நான் ஒரு நேர்மையான வரிகட்டுபவர். இதைப் பற்றி எந்த ஆடிட்டரிடமும் நீங்கள் கேட்டுக்கொள்ளலாம்’’என அவர் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!