ஆன்லைன் மது விற்பனை தொடங்கியாச்சு ... வீட்டுக்கே தேடிவரும் குவாட்டர், பீர்...குஷியில் பெண்களும் ஆண்களும்.!

By T BalamurukanFirst Published May 21, 2020, 7:06 PM IST
Highlights

ஸ்விக்கி(swiggy) மற்றும் ஜொமாட்டோ(zomoto) நிறுவனங்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் மதுபானங்களை வாடிக்கையாளர் வீட்டிற்கே டெலிவரி செய்ய துவங்கி இருக்கின்றன. மாநில அரசிடம் இருந்து முறையான அனுமதி பெற்ற பின் முதற்கட்டமாக மதுமான டெலிவரி ராஞ்சியில் துவங்கியுள்ளது.இது மதுப்பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 

ஸ்விக்கி(swiggy) மற்றும் ஜொமாட்டோ(zomato) நிறுவனங்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் மதுபானங்களை வாடிக்கையாளர் வீட்டிற்கே டெலிவரி செய்ய துவங்கி இருக்கின்றன. மாநில அரசிடம் இருந்து முறையான அனுமதி பெற்ற பின் முதற்கட்டமாக மதுமான டெலிவரி ராஞ்சியில் துவங்கியுள்ளது.இது மதுப்பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 மாநிலத்தின் மற்ற மாவட்டங்களிலும் இது நீட்டிக்கப்படும் என தெரிகிறது. ஸ்விக்கியில் மதுபானங்களை விற்க அந்நிறுவனம் செயலியில் ஒயின் ஷாப்ஸ் எனும் பிரத்யேக பிரிவை துவங்கியுள்ளது. ஜொமாட்டோ செயலியிலும் இதேபோன்ற பிரிவு சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவையற்ற பதற்றத்தை தவிர்க்க மதுபானங்களை வாங்குவோர் தங்களது வயது சான்று மற்றும் பயனர் சான்றை சமர்பிக்க வேண்டும் என ஸ்விக்கி தெரிவித்துள்ளது. வயது சான்றிற்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, மற்றும் செல்ஃபி ஒன்றும் அனுப்ப வேண்டும். டெலிவரி செய்யப்படும் போது ஒடிபி(OTP) மூலம் பயனர் சரிபார்க்கப்படுவர்.

இத்துடன் வாடிக்கையாளர்கள் ஒரே சமயத்தில் அதிகளவு மதுபானங்களை ஆர்டர் செய்வதை தடுக்கும் நோக்கில் மாநில அரசு விதிகளுக்கு ஏற்ற வகையில் மதுபானத்திற்கு ஆர்டர் ஏற்கப்படும் என்றும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

ஸ்விக்கி போன்று ஜொமாட்டோ நிறுவனமும் மதுபானங்களை டெலிவரி செய்வதாக தெரிவித்துள்ளது. எனினும், பயனர்களுக்கு வயது அடிப்படையில் மதுபானங்களை எவ்வாறு கண்டறியும் என்ற விவரங்களை ஜொமாட்டோ இதுவரை தெரிவிக்கவில்லை.ஆன்லைன் மூலம் மதுவிற்பனையை தொடங்கியிருப்பதற்கு மதுப்பிரியர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தாலும் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை இதன் மூலம் அதிகரிக்கும் என்கிற அச்சம் சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

click me!