5 நாட்களுக்கு ஆன்லைன் கிளாஸ் விடுமுறை... மட்டற்ற மகிழ்ச்சியில் மாணவர்கள்..!

By Thiraviaraj RMFirst Published Sep 9, 2020, 6:02 PM IST
Highlights

தமிழகத்தில் மாணவர்களுக்கு நடைபெற்றுவரும் ஆன்லைன் வகுப்புகளுக்கு 5 நாட்கள் விடுப்பு அளிக்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் மாணவர்களுக்கு நடைபெற்றுவரும் ஆன்லைன் வகுப்புகளுக்கு 5 நாட்கள் விடுப்பு அளிக்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.

 

தமிழகத்தில் ஒருவனா காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தொடர்ந்து மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் படிப்பதால் உடல்நலக் குறைபாடு ஏற்படுவதாகவும், பல மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக செப்டம்பர் 12ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாமல் உள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு செய்ய கண்காணிப்புக் குழு அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

click me!