வெங்காயத்தின் மூலம் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திட்டத்துக்கு ஆப்பு வைத்த மத்தியஅரசு !!

By Selvanayagam PFirst Published Sep 25, 2019, 7:21 AM IST
Highlights

வெங்காயம் விலை உயர்ந்துவரும் நிலையில் டெல்லி மக்களுக்கு விரைவில் கிலோ ரூ.24-க்கு விற்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரவித்த நிலையில், அவரின் திட்டத்தை உடைக்கும் விதமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு, ஒரு விலை வெங்காயத்தை கிலோ 22 ரூபாய்க்கு வழங்கி வருகிறது

டெல்லியில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நிலையில் மக்களைக் கவர்ந்து, ஆட்சியைப்பிடிக்கும் நோக்கில் மத்திய அரசு களத்தில் இறங்கியுள்ளது.
டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 22 ரூபாய்க்கு மத்திய அரசே நேரடியாக விற்பனை செய்வதால் இதை வாங்க மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

பெரிய வெங்காயம் விளையும் மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தானின் கிழக்குப் பகுதி, மத்தியப் பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதி ஆகியவற்றில் பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் இங்கிருந்து வெங்காய வரத்து குறைந்துவிட்டதால், திடீர் விலை ஏற்றத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

மத்திய அரசின் நுகர்வோர் துறை புள்ளிவிவரங்கள்படி, சில்லறை விலையில் பெரிய வெங்காயத்தின் விலை டெல்லியில் கிலோ ரூ.80 ஆகவும், மும்பையில் ரூ.70 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.50 ஆகவும், சென்னையில் ரூ.50 முதல் ரூ.60 ஆகவும் விற்கப்படுகிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்புவரை ஒரு கிலோ பெரிய வெங்காயம் கிலோ ரூ.50 வரை விற்பனையான நிலையில், திடீரென ரூ.80 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதற்கிடயே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அளித்த பேட்டியில் “ டெல்லி அரசு வெங்காயம்கொள்முதலை தீவிரப்படுத்தி வருகிறது. அடுத்த 10 நாட்களில் மக்களுக்கு வெங்காயம் கிலோ ரூ.24க்கு வழங்கப்படும். நியாயவிலைக் கடைகளிலும், வீடுகளுக்கே சென்றும் வழங்கப்படும்” எனத்தெரிவித்திருந்தார்.

ஆனால், அடுத்தஆண்டு டெல்லியில்சட்டப்பேரவைத் தேர்தல் வருவதையொட்டி டெல்லி மக்களைக் கவரும் வகையில் மத்தியஅரசே வெங்காயத்தை டெல்லி அரசு அறிவித்த விலையைக் காட்டிலும் 2 ரூபாய் குறைவாக விற்பனை செய்து வருகிறது.

மத்திய அரசின் நியாய விலைக்கடை நடமாடும் வாகனங்கள் மூலமாக விற்பனையை மத்திய அரசு நேரடியாக விற்பனையை தொடங்கியுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 22 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது. இதனால் ஆம் ஆத்மி கட்சியினர் என்ன செய்வது எனத்தெரியாமல் திகைத்துப் போயுள்ளனர்.

வெளிச்சந்தையில் கிலோ வெங்காயம் ரூ.70 முதல் ரூ.80-க்கு விற்பனையாகும் நிலையில் மத்திய அரசு ரூ 22்க்கு வழங்குவதை வாங்க மக்கள் ஆர்வத்துடன் வருகின்றனர். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டத் திட்டத்துக்கு மாற்றாக, மத்திய அரசு களமிறங்கி மக்களின் நன்மதிப்பைஅறுவடை செய்து வருகிறது

click me!