வாங்க மிஸ்டர் ஸ்டாலின் ! இடைத் தேர்தலில் ஒத்தைக்கு ஒத்தை மோதிப் பார்க்கலாமா !! ராஜேந்திர பாலாஜி அதிரடி அறைகூவல் பேச்சு !!

Published : Sep 24, 2019, 11:50 PM IST
வாங்க மிஸ்டர் ஸ்டாலின் ! இடைத் தேர்தலில் ஒத்தைக்கு ஒத்தை மோதிப் பார்க்கலாமா !! ராஜேந்திர பாலாஜி அதிரடி அறைகூவல் பேச்சு !!

சுருக்கம்

நாங்குநேரி மற்றும்  விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக  வா வா, மல்லுக்கு வா,வா.  சண்டைக்கு வா மோதிப் பார்ப்போம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடியாக பேசியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சந்திர பிரபா, ராஜவர்மன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நாங்கள் அவர்களை அடித்து வெளுத்து சட்டையை கிழிப்போம் என்று தெரிந்துதான் திமுக நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாபஸ் வாங்கியது என கூறினார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வா வா , மல்லுக்கு வா, சண்டைக்கு வா, மோதிப் பார்ப்போம் எனக் கூறிய ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார் .
ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமான திமுகவை இருக்கும் இடம் தெரியாமல் அழித்துவிடுவோம். 

ஜெயலலிதாவை தனி கோர்ட் அமைத்து சிறையில் அடைக்க காரணமாக இருந்த ப.சிதம்பரம், நீ தோண்டிய படு குழியில் நீயே விழுந்துவிட்டாய் என எல்லோரையும் ஒருமையில் பேசி அதிர வைத்தார்.

PREV
click me!

Recommended Stories

TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?
Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?