சின்ன வெங்காயமும், நம்ம அமைச்சர் செல்லூர் ராஜூவும்

By Selvanayagam PFirst Published Sep 27, 2019, 11:51 PM IST
Highlights

இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிப்பதற்கு வருத்தப்படுகிறேன். ஆனால், இந்த கொலை சம்பவம் மிக கொடூரமாக நடந்துள்ளது. இது போன்ற கொடூர குற்றத்தில் ஈடுபட்டோருக்கு, குறைந்த பட்ச தண்டனை விதித்து, வெளியேவிட்டால் சமூகத்தில் இன்னும் பலர் பாதிக்கப்படுவார்கள் என்பதால் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கிறேன்! 
(கோவை 55 வயது பெண்மணியை குரூரமாக கொன்ற யாசர் அராபத்)

பூர்ண ஜெயா ஆனந்த் (நீதிபதி)
*    தமிழ்நாட்டில் ஸ்பிக் உரத் தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், விவசாயத்திற்கு தேவையான யூரியா உரத்திற்கு தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தனியாரிடம் 50 - 70 ரூபாய் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது. 
-    வைகோ (ம.தி.மு.க. பொதுச்செயலாளர்)

*    ஆந்திராவிலிருந்து  மொத்தமாக வாங்கி வரப்படும் வெங்காயம், கிலோ முப்பத்து மூன்று எனும் விலையில் சென்னையில் உள்ள இருநூறு ரேஷன் கடைகளில் விற்கப்படும். இனிமேல் வெங்காயம் விலை உயர வாய்ப்பில்லை. அரசு எடுக்கும் நடவடிக்கைகளின் மூலம் மக்களின் பாதிப்பு தவிர்க்கப்படும். 
-    செல்லூர் ராஜூ (கூட்டுறவுத்துறை அமைச்சர்)

*    வேலூர் லோக்சபா தேர்தலுக்குப் பின் தமிழக மக்களின் மனநிலை மாறியுள்ளது. அ.தி.மு.க.வுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என்பதை இந்த இரு தொகுதி இடைத்தேர்தல்களில் நிரூபித்துக் காட்டுவோம்
-    எடப்பாடி பழனிச்சாமி (தமிழக முதலமைச்சர்)

*    தேர்தலின்போது கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகள், சிறிய கட்சிகளுக்கு நிதியுதவி செய்வது வழக்கமானதுதான். அந்த வகையில்தான் தி.மு.க.விடம் நன்கொடை பெறப்பட்டது.
-    முத்தரசன் (தமிழக இ.கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்)

*    நடிகர் திலகம் சிவாஜியின் ‘பராசக்தி’ படத்தின் வசனத்தை கேலி செய்து, சினிமா காட்சிகள் உருவாக்கிய சிரிப்பு நடிகர் விவேக், இப்போது சிவாஜியின் ‘இரும்புத்திரை படத்தின் ‘நெஞ்சில் குடியிருக்கும்...’ பாடலை கிண்டல் செய்துள்ளார். அவர் இந்த போக்கை தொடர்ந்தால், அவருக்கு எதிராக போராட்டம் வெடிக்கும். 
-    சந்திரசேகரன் (சிவாஜி சமூக நல பேரவை தலைவர்)

*    ஹிந்தியை திணிக்க வேண்டும், சமஸ்கிருதத்தை திணிக்க வேண்டும் என்று அவசர கதியில் பா.ஜ. அரசு அல்லல்படுகிறது. பொறியியல் கல்லூரிகளில் கூட சமஸ்கிருதத்தை பாடமாக வைக்க நினைக்கிற இவங்களை என்னான்னு சொல்றது!
-    கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்)

*    இரு தொகுதி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு தர தே.மு.தி.க. இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளதாம். ஒன்று, எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல்களில் தங்களுக்கு கணிசமான இடங்களை ஒதுக்க வேண்டும். ரெண்டாவது, அங்கே போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர்களின் செலவை அ.தி.மு.க. ஏற்க வேண்டும். 

-    செய்தி.
*    நம் நாட்டில் பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளது, வேலை இழப்பு அதிகரித்துக் கொண்டே உள்ளது. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் அறுபது லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர் நாட்டில். 
-    சீத்தாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் பொதுசெயலாளர்)

*    ஓய்வு பெறும் ஆசிரியர்கள் அதே பள்ளியில் சேவை அடிப்படையில் பணியாற்ற விரும்பினால் அனுமதி வழங்கப்படும். மேலும் அடுத்த ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலணிக்கு பதிலாக ஷூ வழங்கப்படும்.

-    செங்கோட்டையன் (தமிழக கல்வித்துறை அமைச்சர்)

click me!