
இறந்து ஒரு வருடமான பின்னும் தமிழக அரசியல் ஜெயலலிதாவை சுற்றித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அட! அவரது சொந்தக்கட்சி மட்டும் அவரின் பெயரைச் சொல்லி ஆட்சி செய்தால் பரவாயில்லை எதிர்கட்சியுமல்லாவா ஜெயலலிதா ஸ்டைலில் அரசியல் செய்கிறது?!
எடப்பாடி - பன்னீர் இணைந்த தமிழக அரசு ‘அம்மாவின் அரசு’ என்று ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. தினகரனும் ஜெயலலிதாவின் பெயரையும், படத்தையும் முன்னிறுத்தித்தான் அரசியலில் வளர்ந்து கொண்டும், தன்னைக் காப்பாற்றிக் கொண்டும் இருக்கிறார்.
இந்நிலையில், அ.தி.மு.க.வின் பரம எதிரியான தி.மு.க. கூட ஜெயலலிதாவின் பாணியை காப்பியடிப்பதுதான் ஹைலைட்டே. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக ஸ்டாலின் விழுந்து விழுந்து பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்த்தால் ‘17, 18 மற்றும் 19’ ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே பிரச்சாரம் செய்யப்போகிறார் என்று அறிவித்திருக்கிறார்கள்.
ஏன் இப்படி? என்று கேட்டால் “ஆர்.கே.நகர்ல ஜெயலலிதா போட்டியிட்டப்ப தனக்கே மூணு நாள்தான் அந்தம்மா பிரச்சாரம் பண்ணினாங்க. இந்த ஸ்டைல்ல செயல்தலைவர் மூணு நாள் பிரச்சாரம் பண்ணினால் பத்தாதா? கடைசி கட்ட பிரச்சார சமயமான அந்த நாட்கள்ள செயல்தலைவர் அடிச்சு துவைச்சு பிரச்சாரம் பண்ணினா, போதும் ஈஸியா ஜெயிச்சிடலாம்!” என்கிறார்கள்.
ஜெ.,வை பார்த்து ஸ்டாலின் அரசியல் செய்யும் இந்த நிலையை ‘ஜெ ஸ்டைலை ஸ்டாலின் ஃபாலோ பண்ண ஆரம்பிச்சு வெகு காலமாகி போச்சு! அந்தம்மா இருக்கும்போதே ‘அ.தி.மு.க. தலைமை போல் நம்ம கட்சியிலும் சர்வாதிகாரம் வேண்டும்’ அப்படின்னு கேட்டவர்தானே ஸ்டாலின்.” என்கிறார்கள்.
ஓஹோ!...