இந்த 3 பேரில் ஒருவர் தான் அதிமுக வேட்பாளர்? முடிவு செய்த இபிஎஸ்.. வெளியான பரபரப்பு தகவல்..!

Published : Jan 28, 2023, 07:39 AM ISTUpdated : Jan 28, 2023, 07:42 AM IST
இந்த 3 பேரில் ஒருவர் தான் அதிமுக வேட்பாளர்? முடிவு செய்த இபிஎஸ்.. வெளியான பரபரப்பு தகவல்..!

சுருக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரை தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரை தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதியன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி போட்டியிட்டு கடந்த முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறையும் திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டு பிரச்சாரமும் தொடங்கப்பட்டு விட்டது.

இதையும் படிங்க;- அதிமுக பொதுக்குழு வழக்கு..! தீர்ப்பு எப்போது தெரியுமா..? உச்சநீதிமன்ற நீதிபதிகள் புதிய தகவல்

இந்நிலையில், அதிமுக சார்பில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.  இதனால், யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று  எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக ஆளும் திமுக கூட்டணியை கட்சியை வீழ்த்துவது முக்கியமல்ல, ஓபிஎஸ் அணியை விட அதிக வாக்குகள் பெற்று உண்மையான அதிமுக நாங்கள் என்பதை நிரூபித்து இரட்டை இலையை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் இபிஎஸ் தீவிரமாக இருந்து வருகிறார். ஆகையால் வேட்பாளர் தேர்வில் மிகவும் கவனமாக இருந்து வருகிறார். 

இதையும் படிங்க;-  ஈரோடு கிழக்கு தொகுதி; அமமுக சார்பில் இளம் வேட்பாளருக்கு வாய்ப்பளித்த டிடிவி தினகரன்

இந்நிலையில், தென்னரசு, ராமலிங்கம், நந்தகுமார் ஆகிய மூவரில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில் முன்னாள் எம்எல்ஏவான தென்னரசு போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், முன்னாள் அமைச்சர் ராமலிங்கம் அல்லது மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் நந்தகுமார் ஆகியோரில் ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு