பீதியை ஏற்படுத்திய பாஜக... டெல்லியில் ஒன்று கூடிய 21 எதிர்கட்சி பிரதிநிதிகள்..!

By Thiraviaraj RMFirst Published May 21, 2019, 2:09 PM IST
Highlights

டெல்லியில் பாஜகவுக்கு எதிரான காங்கிரஸ் உள்ளிட்ட 21 எதிர்கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி வருகின்றன.
 

டெல்லியில் பாஜகவுக்கு எதிரான காங்கிரஸ் உள்ளிட்ட 21 எதிர்கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி வருகின்றன.

21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள், இந்திய தேர்தல் ஆணையத்தை சந்தித்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் விவிபிஏடி வாக்குச் சீட்டு இயந்திரம் ஆகியவை குறித்து தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தெரிவிக்க உள்ளனர். அத்தோடு வாக்குகளை ஒப்புகை சீட்டுடன் எண்ண வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

2019 தேர்தலில், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு எளிமையான வெற்றி கிடைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் யூகித்துள்ளதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது. கருத்துக் கணிப்புகளில், எதிர்க்கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதான பிராந்தியக் கட்சிகள், இந்தத் தேர்தலில் சறுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜக-வுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் 122 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது என்று 13 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மூலம் அறிய முடிகிறது. 

இதனையொட்டி எதிர்க்கட்சிகள், தேர்தல் முடிவுகள் நாளை மறு நாள் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்குதேசம் உள்ளிட்ட 21 எதிர்கட்சிகளின் பிரதிநிதிகள் டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 
 

click me!