திமுகவுக்கு 19- அதளபாதாளத்தில் அதிமுக... அதிரடி கருத்து கணிப்பு..!

By vinoth kumarFirst Published May 21, 2019, 2:05 PM IST
Highlights

நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என பிரபல தனியார் தொலைக்காட்சி அதிரடி கருத்துக்கணிப்பு முடிவில் தெரிவித்துள்ளது. 

நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என பிரபல தனியார் தொலைக்காட்சி அதிரடி கருத்துக்கணிப்பு முடிவில் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 22 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 38 மக்களவை தொகுதிகளுக்கு தமிழகத்தில் தேர்தல் நடந்தது. பணபட்டுவாடா காரணமாக வேலூரில் மட்டும் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் 11ம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கியது. அதன்பின் வரிசையாக 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்துள்ளதால் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில் தமிழத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி பிரமாண்ட கருத்துக்கணிப்பை நடத்தியது. இதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் திமுக கூட்டணி, மத்திய சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், கடலூர்,  கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர்,  நாகை,  மயிலாடுதுறை, கரூர், ஈரோடு, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடி ஆகிய 19 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

இதேபோல், அதிமுக கூட்டணி திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சேலம், பொள்ளாச்சி, தேனி மற்றும் திருப்பூர் ஆகிய 6 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 

கன்னியாகுமரி, அரக்கோணம், விழுப்புரம், ஆரணி, சிதம்பரம்,  கோவை, ராமநாதபுரம், தர்மபுரி, மதுரை, நாமக்கல், திருவண்ணாமலை, தென்சென்னை, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி ஆகிய 15 தொகுதிகளில் கடும் போட்டி உள்ளதால் இழுபறி தொகு​திகளாக கணிக்கப்பட்டுள்ளது. 

click me!