திக்கித் திணறும் அன்புமணி... இழுபறியில் திருமா..!

By Thiraviaraj RMFirst Published May 21, 2019, 12:47 PM IST
Highlights

அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தருமபுரி தொகுதியிலும், திருமாவளவன் களமிறங்கிய சிதம்பரம் தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதில் இழுபறி நீடிப்பதாக  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
 

அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தருமபுரி தொகுதியிலும், திருமாவளவன் களமிறங்கிய சிதம்பரம் தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதில் இழுபறி நீடிப்பதாக  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு தனியார் தொலைக்காட்சிகள் வெளியிட்டு வருகின்றன. சமீபத்தில் இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா இணைந்து வெளியிட்ட கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் இழுபறியாக உள்ள தொகுதிகளை பட்டியலிட்டு உள்ளது. அதில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்றும் , அதிமுக படு தோல்வி அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் தர்மபுரி தொகுதியில் திமுக வேட்பாளருடன் வெற்றி பெறுவதில் இழுபறி நீடிப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் அதிமுக வேட்பாளருடன் இழுபறி நீடிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.  

அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் ரவிக்குமாருக்கும் பாமக வேட்பாளருக்கும் இழுபறி நீடிப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. சேலம் தொகுதியில் திமுக - அதிமுக வேட்பாளருக்கும்,  திருப்பூரில் அதிமுக- சிபிஐ வேட்பாளருக்கும் கடும் போட்டி நிலவுகிறது. 

தேனியில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திர நாத்- காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும், கன்னியாகுமரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்கும் கடும் போட்டி நிலவுவதாக அந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. 

click me!