மோடி மீது தாக்கு... கைது பீதியில் திருமுருகன் காந்தி..!

By vinoth kumarFirst Published May 21, 2019, 12:27 PM IST
Highlights

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடியை கருமையாக  விமர்சித்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இலங்கையில் நடைபெற்ற போரின் போது, முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட ஏராளமானோர்  கலந்து கொண்டனர். மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் பல்வேறு கட்சி தலைவர்களும் இலங்கை போரில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில் அன்று நடைபெற்ற கூட்டத்தில் திருமுருகன் காந்தி பிரதமரையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து பேசினார். இதன் காரணமாக அவர் மீது சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருமுருகன் காந்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருந்து வரும் நிலையில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

click me!