ஒரே நாடு…. ஒரே ரேஷன் கார்டு …. மத்திய அரசு அதிரடி திட்டம் !

By Selvanayagam PFirst Published Jun 28, 2019, 7:07 AM IST
Highlights

ஒரே நாடு … ஒரே தேர்தல் என்ற திட்டத்தை பாஜக அரசு நாடு முழுவதும் செயல்படுத்த திட்டமிட்டு வரும் நிலையில், தற்போது உணவும் பொருள் விநியோகத்தை சீரமைக்கும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.
 

உணவு விநியோக திட்டம் தொடர்பாகவும், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காகவும், மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. 

இந்த கூட்டத்தில பேசிய  ராம்விலாஸ் பஸ்வான் நாடு முழுவதும் உள்ள, தேசிய உணவு கழக கிடங்குகளில், போதிய அளவு உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இங்கிருந்து, உணவு பொருட்களை விரைவில் விநியோகம் செய்யும் வகையில், 'ஆன்லைன்' வசதி ஏற்படுத்தப்படும். மக்கள், நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையிலும், பொருட்களை வாங்கும் வகையில், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம், விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கூறினார்.

தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில், இத்திட்டம், சோதனை ரீதியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், நுகர்வோர், ரேஷன் பொருட்களை வாங்க, ஒரு கடையை மட்டும் சார்ந்திராமல், எந்த கடையிலும் வாங்கும் சுதந்திரம் கிடைக்கும்.

இத்திட்டத்தால், பணி நிமித்தமாக, தங்கள் சொந்த மாநிலத்தை விட்டு, வேறு மாநிலங்களில் வசிக்கும் ஊழியர்கள், தொழிலாளர்களின் குடும்பத்தினர் பெரிதும் பயனடைவார்கள் என்றும் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.

click me!