கிள்ளியூர் முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ் காலமானார் !! உடல்நலக்குறைவால் மரணம் !!

Published : Jun 27, 2019, 08:53 PM IST
கிள்ளியூர் முன்னாள் எம்எல்ஏ  குமாரதாஸ் காலமானார் !! உடல்நலக்குறைவால் மரணம் !!

சுருக்கம்

கிள்ளியூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமாரதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.  நெஞ்சு வலி காரணமாக குமாரதாஸ் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

குமாரதாஸ் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் இருந்து 4 முறை சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்.  1984, 1991, 1996, 2001 என 4 முறை கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார்.

தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் துணை தலைவராக குமாரதாஸ் பதவி வகித்து வந்தார். இவர் ஜனதாதளம், காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், பின்னர் மீண்டும் காங்கிரஸ் கடைசியாக மீண்டும் வாசன் துவக்கிய தமிழ் மாநில காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளில் உறுப்பினராக இருந்துள்ளார்.

இடையில் கடந்த டிசம்பர் 2002ம் ஆண்டில், தமிழ் மாநில காமராஜர் காங்கிரஸ் என்று அழைக்கப்பட்ட ஒரு புதிய கட்சியையும் குமாரதாஸ் உருவாக்கினார்.

இவர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட போது இரு முறை ஜனதா தளம் சார்பிலும் , இரு முறை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பிலும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தலில் நின்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வானது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!