வீட்டை தரைமட்டமாக்கிய ஜெகன் மோகன்... கட்சியை அடியோடு சரிக்கும் பாஜக... சந்திரபாபு நாயுடுவுக்கு அடி மேல் அடி..!

By Thiraviaraj RMFirst Published Jun 27, 2019, 6:28 PM IST
Highlights

தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி இன்று ஒரே நாளில் 4 முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணைந்தது சந்திரபாபு நாயுடுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி இன்று ஒரே நாளில் 4 முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணைந்தது சந்திரபாபு நாயுடுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடைபெற்று முடிந்த ஆந்திர சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் மோசமான தோல்வி அடைந்தது. இதனால், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுத்தது. தோல்விக்கு பின்னர் தெலுங்கு தேசம் கட்சி மிகவும் பலவீனமடைந்து வரும் நிலையில் அன்றாடம் அக்கட்சியில் இருந்து தொண்டர்களும், தலைவர்களும் மாற்று கட்சிகளில் இணைந்து வருகின்றனர். 

அந்த வகையில் நேற்று தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் லங்கா தினகரும், இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினரான ராம்குமார் காஷ்யப்பும், முன்னாள் எம்.பியான அப்துல்லாகுட்டியும் பாஜகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து இன்று ஒரே நாளில் தெலுங்கானாவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியத் தலைவரும் முன்னாள் அமைச்சர்களுமான பெட்டி ரெட்டி, போடா ஜனதார்தன், முன்னாள் எம்.பி சுரேஷ் ரெட்டி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர்.

 

சிறிது நாட்கள் முன்னர் தெலுங்கு தேசம் கட்சியின் 4 ராஜ்ய சபா உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். அந்த அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில் தற்போது மேலும் பல முக்கியத் தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகியிருப்பது தொண்டர்கள் மத்தியிலும் தலைவர் சந்திரபாபு நாயுடு மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

ஆந்திர பாஜக தலைவர் லஷ்மிநாராயனா கூறுகையில், தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து மேலும் பல தலைவர்கள் எதிர்வரும் நாட்களில் பாஜகவில் இணையவுள்ளதாக கூறினார். அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் சிலர் பாஜக மூத்த தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதே போல தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான சசிதர் ரெட்டி, மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் ஷேக் ரஹ்மத்துல்லா ஆகியோரும் முரளிதர் ராவ் முன்னிலையில் பாஜகவில் இன்று இணைந்தனர். காங்கிரஸ் கட்சி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு மறைமுகமாக உதவுகிறது என சாடியுள்ள இவர்கள் மாநிலத்தில் குடும்ப ஆட்சிக்கு எதிரான மாற்று பாஜக மட்டுமே என கூறினர். 

click me!