இந்த முறையும் போனி ஆகாத ஜெயலலிதா ஹெலிகாப்டர்..!

Published : Jun 27, 2019, 06:06 PM IST
இந்த முறையும் போனி ஆகாத ஜெயலலிதா ஹெலிகாப்டர்..!

சுருக்கம்

ஜெயலலிதாவின் பயன்படுத்திய ஹெலிகாப்டரை வாங்க இந்த முறையும் யாரும் முன்வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவின் பயன்படுத்திய ஹெலிகாப்டரை வாங்க இந்த முறையும் யாரும் முன்வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பயணத்துக்காக கடந்த 2006-ம் ஆண்டு நவீன ஹெலிகாப்டர் ஒன்று வாங்கப்பட்டது. பெல் 412 இ.பி. என்ற வகையைச் சேர்ந்த இந்த ஹெலிகாப்டர் 2 என்ஜின்கள் கொண்டது. 11 பேர் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்ய முடியும். ஜெயலலிதா முதல்வராக இருந்த கால கட்டங்களில் பல தடவை அந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தி உள்ளார். அவர் மரணத்துக்கு பிறகும் அந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வந்தது.

 

கடைசியாக அந்த ஹெலிகாப்டர் 2018-ம் ஆண்டு கடந்த மார்ச் மாதம் வரை பயன்படுத்தப்பட்டது. பிறகு பழுது அடைந்ததால் அதன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு விட்டன. இந்த ஹெலிகாப்டர் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்ற முறை ஏலம் மூலம் விற்க அடிப்படை விலையாக 35 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதனை ஏலத்திற்கு எடுக்க யாரும் முன்வரவில்லை.

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலின் போதாவது யாராவது ஹெலிகாப்டரை ஏலத்தில் எடுக்க முன்வருவார்கள் என அதிகாரிகள் நினைத்திருந்தனர். ஆனால் யாரும் அப்போதும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. 

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒருமுறை ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. இதனிடையே ஒருவேளை அடிப்படை விலையை குறைத்தால் ஹெலிகாப்டர் ஏலம் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். யாரும் ஏலத்திற்கு வாங்க முன்வராத காரணத்தினால் தற்போது வரை அந்த ஹெலிகாப்டர் சென்னை விமான நிலையத்திலேயே உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!