அதிரடி காட்டும் நிர்மலா சீதாராமன்..! "ஒரே நாடு ஒரே மின்சார திட்டம்"..!

By ezhil mozhiFirst Published Jul 5, 2019, 12:50 PM IST
Highlights

நடப்பு நிதி ஆண்டின் முழுமையான பட்ஜெட் தற்போது நாடாளுமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டுவரும் நிலையில்,  தமிழகத்தில் இருந்து பட்ஜெட் தாக்கல் செய்யும் 6வது நபர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

அதிரடி காட்டும் நிர்மலா சீதாராமன்..! "ஒரே நாடு ஒரே மின்சார திட்டம்"..! 

நடப்பு நிதி ஆண்டின் முழுமையான பட்ஜெட் தற்போது நாடாளுமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டுவரும் நிலையில், தமிழகத்தில் இருந்து பட்ஜெட் தாக்கல் செய்யும் 6வது நபர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

அதில் முக்கிய திட்டமாக, ஒரே நாடு ஒரே மின்சார விநியோக அமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்து உள்ளார். அதன் படி, நாடு முழுவதும் சம அளவில் மின்சார வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்து உள்ளார்.  

அப்போது, 

ஒரே நாடு ஒரே மின்சார விநியோக அமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். நாடு முழுவதும் சம அளவில் மின்சார வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்புக்கு சிறப்புச் சலுகை வழங்கப்படும்,மின்சார வாகனங்களை ஊக்குவிக்க 3 ஆண்டுகளுக்கு ரூ 10 ஆயிரம் கோடி முதலீடு

அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்படும்- ரயில், பஸ் என எல்லாவற்றுக்கும் ஒரே அட்டை அறிமுகப்படுத்தப்படும்

அறிவியல் ஆராய்சிக்காக தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை உருவாக்கப்படும், உயர் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்த புதிய திட்டங்களை செயல்படுத்தப்படும்

உலகின் சிறந்த 200 தொழில்நுட்ப கல்வி நிலைய்களில் இந்தியாவின் 2 ஐ.ஐ.டி.க்கள், ஐ.ஐ.எஸ்.சி. இடம் பெற்றுள்ளது

ஒரே நாடு ஒரே மின்சார விநியோக அமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

நாடு முழுவதும் சம அளவில் மின்சார விநியோகம் மேற்கொள்ள ஒரே நாடு ஒரே மின்சார திட்டம செயல்படுத்தப்படும்

இந்திய பொருளாதாரம் உலகின் 3-வது பொருளாதாரமாக விளங்குகிறது, 2022-ம் ஆண்டுக்குள் 1.95 கோடி வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களுக்காக சட்ட சீர்திருத்தம் கொண்டுவரப்படும்.இது போன்று மேலும் பல திட்டங்களை தொடர்ந்து அறிவித்து வருகிறார் நிர்மலாசீதாராமன். 

click me!