1 லட்சத்து 25 ஆயிரம் கிலோ மீட்டர் புதிய சாலைகள் அமைக்கப்படும்... நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Jul 5, 2019, 12:41 PM IST
Highlights

புதிதாக 1 லட்சத்து 25 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 
 

புதிதாக 1 லட்சத்து 25 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

இந்தியாவின் 2019-20ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதில், ’’என்.ஆர்.ஐ முதலீட்டுக்கான விதிகள் தளர்த்தப்படும். 1 லட்சத்து 25 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் மேம்படுத்தப்படும். இந்தியா உயர்கல்வி நிறுவனங்களுக்கான மையமாக உள்ளது. தற்போது 3 இந்திய கல்வி நிறுவனங்கள் சர்வதேச தரப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. 10 ஆயிரம் விவசாய உற்பத்தியாளர் சங்கங்கள் உருவாக்கப்படும்.

அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான, சுகாதாரமான குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும். கிராமப்புற விவசாய தொழில் சார்ந்து 75 ஆயிரம் தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். அனைத்து கிராமங்களிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்படும், கழிவுப் பொருட்களில் இருந்து எரிசக்தி எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயம் சார்ந்த உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 9.6 கோடி கழிவறைகள் இதுவரை கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஊராட்சிகளிலும் இணைய சேவை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகர்ப்புற வீடுகள் திட்டத்தின் கீழ் 22 லட்சம் வீடுகள் பெறப்பட்டுள்ளன. நகர்ப்புற வீடுகள் திட்டத்தின் கீழ் 47 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன’’ என அவர் தெரிவித்தார்.  

click me!