வீடியோ போட்டு கேள்வி கேட்ட ஹெச் ராஜா... பதிலடி கொடுத்த உதயநிதி, கொந்தளிப்பில் எகிறிய நண்பன் அன்பில் மகேஷ்!!

By sathish kFirst Published Jul 5, 2019, 12:01 PM IST
Highlights

நடந்து முடிந்த தேர்தலில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வெற்றியை தேடி கொடுத்தார் என்ற முறையில்  திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  

நடந்து முடிந்த தேர்தலில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வெற்றியை தேடி கொடுத்தார் என்ற முறையில்  திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  

இந்த அறிவிப்பை அடுத்து,   தனது முகநூலில் வெளியிட்டுள்ள வீடியோவில் திமுகவை விமர்சித்த ஹெச்.ராஜா, ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஸ்டாலின், என் குடும்பத்திலிருந்து யாரும், அது என் மகனாக இருந்தாலும் சரி, மருமகனாக இருந்தாலும் சரி அரசியலுக்கு வரமாட்டார்கள் என்பதை நான் அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன் என்றார். ஆனால், ஏற்கெனவே திமுக மாணவரணி செயலாளராக இருந்த எனது நண்பர் வெள்ளக்கோவில் சாமிநாதனை குப்பையில் போடுவதைப்போல தூக்கி போட்டுவிட்டு தனது மகனை அந்த பதவிக்கு கொண்டு வந்துள்ளதாக விமர்சித்துள்ளார்.

இதற்க்கு பதிலடி கொடுத்த உதயநிதி;  எனக்கு இந்த பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. இது எனக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரமாகவும், பொறுப்பாகவும் நான் கருதவில்லை. ஒட்டுமொத்த தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன். வாரிசு அரசியல் என்ற விமர்சனத்திற்கு என்னுடைய செயல்பாடு தக்க பதிலடியாக இருக்கும் என அதிரடியாக தெரிவித்தார். 

இந்நிலையில், வாரிசு அரசியல் என்ற விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக  உதயநிதியின் நண்பரும், திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் ; திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் என்பதால் உதயநிதி நியமனத்துக்கு விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதை நண்பர் உதயநிதி தனது நடவடிக்கை மூலம் மாற்றிக்காட்டுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதை மிக மகிழ்ச்சியான தருணமாக உணர்கிறேன்.  இளைஞர்களின் வளர்ச்சிக்காக உதயநிதி பாடுபடுவார். ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் செய்யாமல் உதயநிதி இந்த இடத்தை அடையவில்லை. நடந்து முடிந்த தேர்தல்லில் பிரச்சாரம் செய்த உதயநிதி, மக்களை வெகுவாக கவர்ந்தார். அவருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.

ஆனால், உதயநிதி எந்த பதவியையும் விரும்பவில்லை. இளைஞரணியில் பதவி வேண்டும் என எதிர்பார்க்கவில்லை. கட்சியின் வளர்ச்சிக்கு தன்னுடைய பங்கு, இருக்க வேண்டும் என்றே ஆசைப்பட்டார். திமுக நிர்வாகிகள் தான் உதயநிதிக்கு  பொறுப்பு தர வேண்டும் என திமுக தலைவரை  அழுத்தம் கொடுத்தார்கள். அனைத்து மாவட்ட செயலாளர்களும் இந்த கருத்தை தீர்மானமாகவே முன் மொழிந்தார்கள். அதனால் தான் உதயநிதிக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார். 

click me!