“ஒரே நாடு, ஒரே சட்டப்பேரவை” - பிரதமர் மோடி கொடுத்த ‘சூப்பர்’ ஐடியா !

By manimegalai aFirst Published Nov 17, 2021, 5:55 PM IST
Highlights

இந்தியாவில் ஒரே நாடு,ஒரே ரேஷன் போல ஒரே நாடு,ஒரே சட்டப்பேரவை இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று இந்திய பிரதமர் மோடி பேசியுள்ளார்.

 

அகில இந்திய சபாநாயகர்கள் கலந்து கொள்ளும் 82ஆவது மாநாடு ‘இமாச்சலப்பிரதேச மாநிலம்’ சிம்லாவில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் தொடக்க அமர்வான இன்று,  காணொலி மூலம் இந்தியப்  பிரதமர் மோடி உரையாற்றினார்.அதில் பேசிய அவர்,‘பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சட்டம், ஒரே தேர்வு என்பன உள்ளிட்ட ‘ஒரே’ எனும் கொள்கையை நோக்கி சென்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ‘ஒரே நாடு ஒரே சட்டப்பேரவை தளம்’ என்ற யோசனையை முன்வைக்கிறேன். 

இந்தியாவுக்கு ஜனநாயகம் வெறும் நடைமுறை அல்ல. இந்திய வாழ்க்கையின் அங்கமான ஜனநாயகம் நமது இயல்பிலேயே ஊறியது. வரும் ஆண்டுகளில், அசாதாரணமான இலக்குகளை அடையும் வகையில் நாட்டை புதிய உச்சத்திற்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இந்திய உணர்வை வலுப்படுத்த அரசு கொள்கைகளையும், சட்டங்களையும் வகுக்க வேண்டும்.இதற்கு மத்தியில் உடைக்க முடியாத ஒற்றுமை என்ற உணர்வை அளிக்க வேண்டும்.பிரிக்க முடியாத இந்த ஒற்றுமை, நமது பன்முகத்தன்மையை செழுமையாக்கி பாதுகாக்கிறது. இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது. 

இந்தியா சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, கடமை என்ற ஒற்றைத் தாரக மந்திரத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். மேலும், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிராக எழும் குரல்களை கண்காணிப்பது மக்கள் பிரதிநிதிகளின் பணியாக இருக்க வேண்டும்.வரும் ஆண்டுகளில், இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கும், அசாதாரண இலக்குகளை அடையவேண்டும். இதற்கு அனைத்து மக்களின் முயற்சி மிக அவசியம் என்றும்  ஜனநாயகத்தில் அனைத்து மாநிலங்களின் பங்கும் இதில் முக்கியமானது.சட்டமியற்றுமிடத்தின் கட்டுப்பாட்டை மத்தியில் வைத்துக் கொள்வதும், நாடு முழுமைக்கும் ஒரே சட்டம் என்பதன் நோக்கமுமாக இருக்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. அது நாட்டுக்கு மிகவும் நல்லதாகவே அமையும்’ என்று பேசினார்.

 

click me!