ஒரு லட்சம் கோடி ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும்... ஆளுநரிடம் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!!

By Narendran S  |  First Published May 10, 2023, 11:57 PM IST

மதுபான கொள்முதல், விற்பனை, காலி அட்டைபெட்டி வரையிலும் நடைபெறும் ஒரு லட்சம் கோடி ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். 


மதுபான கொள்முதல், விற்பனை, காலி அட்டைபெட்டி வரையிலும் நடைபெறும் ஒரு லட்சம் கோடி ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஆளுநர் மாளிகை நோக்கி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பேரணி நடைபெற்றது. பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவியை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் அவரது கட்சியின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இதையும் படிங்க: மின்வாரிய ஊழியர்களுக்கு குட் நியூஸ்... சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!!

Latest Videos

undefined

அப்போது, சட்டவிரோதமாக இயங்கும் பார்களை மூடவேண்டும் என கிருஷ்ணசாமி ஆளுநரிடம் வலியுறுத்தினார். மேலும் மதுபான கொள்முதல், விற்பனை, காலி அட்டைபெட்டி வரையிலும் நடைபெறும் ஒரு லட்சம் கோடி ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும், அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிகாரிகள் தண்டிக்கப்படும் வரை மது கொள்முதலை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: சூடானில் இருந்து நாடு திரும்பினர் 270 தமிழர்கள்... அமைச்சர் செஞ்சி மஸ்தான் சூப்பர் தகவல்!!

இந்த சந்திப்பு குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, ஸ்டாலின் மற்றும் செந்தில் பாலாஜியின் 1 லட்சம் கோடி டாஸ்மாக் ஊழல். ஆதாரங்களுடன் புதிய தமிழகம் கட்சி வெளியீடு, விசாரணை மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க அனுமதி கோரி ஆளுநரை சந்தித்து மனு என்று தெரிவித்துள்ளார். 

ஸ்டாலின் மற்றும் செந்தில் பாலாஜியின் ‘1 லட்சம் கோடி’ டாஸ்மாக் ஊழல்.!

ஆதாரங்களுடன் புதிய தமிழகம் கட்சி வெளியீடு – விசாரணை மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க அனுமதி கோரி ஆளுநர் அவர்களை சந்தித்து மனு.! pic.twitter.com/5OkhwrIBK7

— Dr K Krishnasamy (@DrKrishnasamy)
click me!