ஸ்டாலினுக்கு ஒண்ணு, உதயநிதிக்கு ஒண்ணு... ஆக மொத்தம் மூணு... அறிவாலயத்தில் அள்ளும் வசூல்..!

Published : Feb 26, 2021, 12:52 PM IST
ஸ்டாலினுக்கு ஒண்ணு, உதயநிதிக்கு ஒண்ணு... ஆக மொத்தம் மூணு... அறிவாலயத்தில் அள்ளும் வசூல்..!

சுருக்கம்

‘’இருக்கிற செலவில் இன்னும் அரை லட்சமா?’’என முனங்கிக் கொண்டே பலரும் வேண்டா வெறுப்பாக இருவர் பெயரிலும் வேட்புமனு செய்கிறார்கள். 

விருப்பமனு தாக்கல் செய்யும் நிகழ்வு அறிவாலயத்தில் சூடுபிடித்திருக்கிறது. விண்ணப்ப கட்டணம், விருப்பமனு கட்டணம் என மொத்தம் 26 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இதன்மூலம் கட்சிக்கு கணிசமாக வரவு வந்து சேருகிறது. மாஜி அமைச்சர்கள் உள்ளிட்ட பெரும் புள்ளிகளுக்கு 26 ஆயிரம் ஒரு பொருட்டே அல்ல. ஆனால் நடுத்தர வசதி கொண்ட நிர்வாகிகள் பாடுதான் திண்டாட்டமாக இருக்கிறது

தங்களுக்காக விருப்பமனு தாக்கல் செய்ய வருபவர்களிடம் கவுண்டரில் இருப்பவர்கள், ‘’உங்க பெயரில் மட்டும் மனு தாக்கல் செய்தால் போதுமா? தலைவர் பெயரிலும், சின்னவர் உதயநிதி பெயரிலும் மனு தாக்கல் செய்யுங்கள்’’என காதை கடிக்கிறார்களாம். ‘’இருக்கிற செலவில் இன்னும் அரை லட்சமா?’’என முனங்கிக் கொண்டே பலரும் வேண்டா வெறுப்பாக இருவர் பெயரிலும் வேட்புமனு செய்கிறார்கள். 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!