ஓணத்துக்கு செம சேல்ஸ் ! தமிழ்நாட்டை பீட் பண்ணிய கேரளா டாஸ்மாக் !!

Published : Sep 12, 2019, 11:26 PM IST
ஓணத்துக்கு செம சேல்ஸ் ! தமிழ்நாட்டை பீட் பண்ணிய கேரளா டாஸ்மாக் !!

சுருக்கம்

ஓணம் திருவிழாவை முன்னிட்டு கேரளாவில் ஒரு வாரத்திற்கு மதுபானக் கடைகளில் விற்பனையான மதுவகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இது தீபாவளிக்கு தமிழகத்தில் ஆகும் விற்பனையை விட அதிகம் என கூறப்படுகிறது.

கேரளாவில் மாநில அரசின் கீழ் செயல்படும் 'கேரள மாநில மதுபானங்கள் ஆணையம்' மூலமாக மாநிலம் முழுவதும் மதுபான விற்பனை நடைபெறுகிறது. 
அதேபோல் அங்கு ஓணம் என்பது பல்வேறு மதங்கள் மற்றும் இனக்குழுவினரால் கொண்டாடப்படும் ஓர் அறுவடைத் திருவிழாவாகும். செப்டம்பர் 10-ஆம் தேதியன்று கொண்டாடப்பட்ட ஓணத்தை முன்னிட்டு செப்டம்பர் 3 முதல் 10 வரையிலான எட்டு நாட்களில் அங்கு மதுபான விற்பனை அமோகமாக இருந்தது.

இந்நிலையில் கேரளாவில் ஓணம் திருவிழாவை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு மதுபானக் கடைகளில் விற்பனையான மதுவகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


இந்த எட்டு நாட்களில் கேரளா முழுமைக்கும் சேர்த்து ரூ. 487 கோடிக்கு மதுவிற்பனை ஆகியுள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.457 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல திரிச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடாவில் உள்ள கடை ஒன்றில் அதிகபட்சமாக ரூ. 1.44 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. கடந்த வருடம் இது ரூ. 1.22 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவின் இந்த மது விற்பனை தமிழகத்தில் தீபாவளிக்கு ஆகும் மது விற்பனையைவிட அதிகம் என கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!