பொதுக்குழுவால் தான் சசிகலாவும் அதிமுகவின் பொது செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரிய ஓ பன்னீர்செல்வம் மனு மீதான உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு விசாரணை இன்று மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.இரு பதவிகளுக்கும் ஒப்புதல் பெறப்படவில்லை என்பதால் தலைமைக்கழக நிர்வாகிகள் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
மேலும் செய்திகளுக்கு.. "தமிழகத்தில் இருந்து ஷிண்டே புறப்படுவார் !" அண்ணாமலை கிளப்பிய புது சர்ச்சை
எனவே பொதுக்குழு நடத்த அனுமதி தர வேண்டும். ஜூன் 23ல் நடந்த பொதுக் குழு கூட்டத்தில் தான் ஜூலை 11 கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனால் பொதுக்குழு குறித்து கடைசி நேரத்தில் நோட்டீஸ் அனுப்பியதாக கூற முடியாது என்று கூறியுள்ளது எடப்பாடி தரப்பு.இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி பழனிசாமி சமீபத்தில் அளித்த பேட்டி அதிமுக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு.. ஓபிஎஸ்சை தே* என்று அவர் திட்டினார்.. எடப்பாடி பழனிசாமி ரசித்தார் - மருது அழகுராஜ் கொடுத்த அதிர்ச்சி
அதில், ‘சசிகலா பயணித்த வழியில் பயணித்து எடப்பாடி பழனிசாமியும் பரப்பன அக்ரஹார சிறைக்கோ, அல்லது திகார் சிறைக்கோ செல்வார். பொதுக்குழுவால் தான் சசிகலாவும் அதிமுகவின் பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். அதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது’ என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு.. அதிமுகவை அழிக்க பார்க்கும் 3 நபர்கள்.. ஓபிஎஸ் போட்ட டீல்.! அதிமுக பிரமுகர் வெளியிட்டசீக்ரெட்