
காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், ராகுல் காந்தியை தலைவராக்க ேவண்டும் என்ற கோரிக்கை காங்கிரசில் வலுத்து வந்தது.
இந்த நிலையில் நேற்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தேர்தலை அக்டோபர் 15-ந்தேதிக்குள் நடத்தி முடிக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த தேர்தல் முடிவடையும் நிலையில், காங்கிரசின் அகில இந்திய தலைவராக தற்போது துணைத் தலைவராக உள்ள ராகுல் காந்தி தேர்ந்து எடுக்கப்படலாம் என, கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
130 ஆண்டு கால வரலாறு கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஏறத்தாழ 20 ஆண்டுகள் சோனியா காந்தி பதவி வகித்து வருகிறார். கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து ராகுல் காந்தி காங்கிரஸ் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.