டி.டி.வி.தினகரனை சந்தித்தார் நடிகை விஜயசாந்தி…நாளுக்கு நாள் பெருகும் ஆதரவு…

 
Published : Jun 07, 2017, 08:22 AM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
டி.டி.வி.தினகரனை சந்தித்தார் நடிகை விஜயசாந்தி…நாளுக்கு நாள் பெருகும் ஆதரவு…

சுருக்கம்

actor Vijaya Shanthi met ttv dinakaran in his adayar house

டி.டி.வி.தினகரனை சந்தித்தார் நடிகை விஜயசாந்தி…நாளுக்கு நாள் பெருகும் ஆதரவு…

அதிமுக அம்மாஅணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை, அடையாறு இல்லத்தில் பிரபல நடிகை விஜயசாந்தி,சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

அதிமுக வை கடந்த 25 ஆண்டுகளாக கட்டிக் காத்த ஜெயலலிதா மறைந்த பிறகு, அக்கட்சி சசிகலா மற்றும் ஓபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்டு வந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவும், அரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில்  டி.டி.வி.தினகரனும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில் இரு அணிகளையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இரு தரப்பு தலைவர்களும் முரண்பட்டு கருத்து தெரிவித்தால் அதற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. அதே நேரத்தில் தினகரனும் கட்சி நடவடிக்கைளில் இருந்தது விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

ஆனால் டி.டி.வி.தினகரன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து, வெளியே வந்த அவர் கட்சிப்பணிகளில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். இதற்ழ அனைத்து அமைச்சர்களும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, தினகரன் தலைமையில் தனி அணி உருவாகியுள்ளது.

இதையடுத்து 29 எம்எல்ஏக்கள் தினகரனை சந்தித்து தங்களத ஆதரவை தெரிவித்தனர். தொடர்ந்து தினகரனுக்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், பிரபல நடிகை விஜயசாந்தி, தினகரனை அவரது அடையாறு  இல்லத்துக்கு நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தார்

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!