திடீரென பின்வாங்கும் சுனில்..! அதிர்ச்சியில் சபரீசன்..! திமுகவை ஆட்டம் காண வைக்கிறதா பாஜக..!

By Selva KathirFirst Published Nov 28, 2019, 10:52 AM IST
Highlights

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவின் மிக முக்கியமான கொள்கை வகுப்பாளராக இருந்து வந்த ஓஎம்ஜி சுனில் அங்கிருந்து விலக ஆயத்தமாகியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவின் மிக முக்கியமான கொள்கை வகுப்பாளராக இருந்து வந்த ஓஎம்ஜி சுனில் அங்கிருந்து விலக ஆயத்தமாகியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

திமுகவில் கலைஞர் இருந்த போதே ஸ்டாலினை முன்னிலைப்படுத்த பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டன. ஆனால் எதுவும் பலன் கொடுக்கவில்லை. இந்த நிலையில் இந்திய அளவில் மிகச்சிறந்த வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரை திமுக தரப்பு நாடியது. ஆனால் திமுக போன்ற கொள்கைகளில் உறுதியாக உள்ள ஒரு அமைப்பிற்கு வியூகம் வகுப்பது கடினம் என்று கூறி அவர் டீசன்ட்டாக தவிர்த்துவிட்டார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் மருமகனுக்கு கிடைத்த அறிமுகம் தான் சுனில்.

சுனில், பிரசாந்த் கிஷோரின் குஜராத் டீமில் இருந்தவர். மோடி 3வது முறையாக குஜராத் முதலமைச்சராக பணியாற்றிய பிரசாந்த் கிஷோர் டீமில் சுனிலுக்கு மிக முக்கிய இடம் இருந்தது. இதனால் அவர் மூலமாக ஸ்டாலினை பிரமோட் செய்ய உருவாக்கப்பட்டது தான் ஓஎம்ஜி நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் சுனில் இருந்தாலும், நிர்வாகச் செலவுகள் அத்தனையும் திமுக தான்.

ஸ்டாலின் பிரச்சாரம் மட்டும் அல்லாமல் திமுகவின் ஐடி விங்கை முழுக்க முழுக்க கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் இந்த ஓஎம்ஜி சுனில் தான். தகவல் தொழில்நுட்பத்துறைக்கு செயலாளராக உள்ள மதுரை எம்எல்ஏ பழனிவேல் ராஜன், ஸ்டாலின் மருமகன் சபரீசன், சுனில் ஆகிய மூவரும் ஒரே டீம். இவர்களுக்கு கீழ் முன்னணி ஊடங்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர்.

சுமார் 5 வருடமாக சுனில் திமுகவில் பணியாற்றினாலும் கடந்த நாடாளுமன்ற தேர்தல் மட்டும் தான் சாதகமான முடிவை கொடுத்தது. இதனால் சுனிலின் மார்கெட் ஏறிய நிலையில் இடைத்தேர்தலின் போது குறைந்துவிட்டது. இந்த நிலையில் தமிழகத்தின் அரசியல் நிலையே மாறிக் கொண்டிருக்கும் வேலையில் தொடர்ந்து திமுகவுடன் பயணிக்க சுனில் விரும்பவில்லை என்கிறார்கள். மேலும் சுனிலை எப்படியாவது பிரித்துவிட வேண்டும் என்று பாஜகவில் உள்ள சிலர் முயற்சிப்பதாகவும் கூறுகிறார்கள்.

இதன் விளைவாகவே கடந்த இரண்டு நாட்களாக சுனில் திமுகவில் இருந்து ஒதுங்கியிருப்பதாகவும் ஆனால் முழுவதுமாக விலகவில்லை என்கிறார்கள். சுனிலை ஸ்டாலினிடம் இருந்து பிரித்துவிட்டால் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவு திமுகவிற்கு ஏற்படும் என்றும் கூட்டணி, தேர்தல் பிரச்சாரத்தில் குழப்பத்தை சந்திக்க நேரிடும் என்றும் எதிர்தரப்பு கருதுகிறது. அப்படி ஒரு விஷயத்திற்காக சுனிலை வேறு ஒரு சூப்பர் இடத்தில் கோர்த்துவிடவும் முயற்சி நடக்கிறது என்கிறார்கள்.

குறிப்பு;- 

ஆர்.கே.நகர் தேர்தலின் போது சுனில் ஓம்ஜியில் இருந்து விலகி பாஜகவின் அழைப்பின் பேரில் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட போது இடைத்தேர்தல் மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றியை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!