Omicron in Tamilnadu:தமிழகத்தில் ஒமைக்ரான்.. இப்போதாவது ஊசி போட்டுக்கங்க.. கதறும் அமைச்சர்..

By Ezhilarasan BabuFirst Published Dec 16, 2021, 10:30 AM IST
Highlights

நைஜீரியாவில் இருந்து வந்த நபருக்கு ஒமிக்கிரான் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவர் நலமுடன் இருப்பதாகவும், தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஒருவருக்கு  ஒமைக்ரான் தொற்று உறுதியாகி இருப்பதாக தமிழக  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக சென்னைக்கு வந்த நபருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். எனவே பொதுமக்கள் ஒமைக்ரான் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து உடனே இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில்  சீனாவில் இருந்து உருவான கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. இதுவரை கொரோனா வைரசால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டு வர முடியாமல் பல நாடுகள் திணறி வருகின்றன. இந்தியா போன்ற நாடுகள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கி மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றன. ஆனாலும் கொரோனா வைரஸ் என்பது  அடிக்கடி  உருமாறி உயிர்ப்புடன் தொடர்கிறது. கொரோனா வைரஸ் டெல்டாவாக மாறி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பிறழ்வுகளுடன் ஒமைக்ரான் வைரசாக அது பரிணமித்துள்ளது. இந்த வைரஸ் அதிக மாறுபாடு கொண்டுள்ளதால் இந்த வைரஸ் உலக அளவில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வைரசை தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் இந்திய அரசு ஈடுபட்டு வரும் நிலையில் சுமார் 68க்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் அந்த வைரஸ் தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் கொரோனா மட்டுமே ஒமைக்ரான் வைரஸ் நிலை குறித்து மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒந்த உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த ஒமைக்ரான் மிக வேகமாக பரவும் தன்மை உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. பல நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது இந்தியாவின் 9 மாநிலங்களில் 68 நபர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளது.

நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக சென்னை வந்த நபர் அவரது குடும்பத்தினர் 6 பேர் என மொத்தம் ஏழு பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு, கிங்ஸ் இன்ஸ்டியூட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு வந்த நபருக்கு தொடர்பில் இருந்த வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். வளசரவாக்கத்தில் சேர்ந்த அந்த நபர் தோகாவில் இருந்து சென்னைக்கு வந்தவர் என அமைச்சர் குறிப்பிட்டார். நைஜீரியாவில் இருந்து வந்த நபருக்கு ஒமிக்கிரான் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவர் நலமுடன் இருப்பதாகவும், தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் அவரது குடும்பத்தினர் 6 பேர் அவரோடு தொடர்பில் இருந்த வளசரவாக்கத்தை சேர்ந்த நபர் உள்ளிட்டவர்களுக்கு ஒமைகிரான் பாதிப்பு உள்ளதாக அச்சம் இருப்பதாகவும், மரபணு பரிசோதனை மறுஆய்வுக்காக மீண்டும் பெங்களூருவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார். 

பொதுமக்கள் இதன் தீவிரத்தை உணர்ந்து இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார். தமிழகம் 100% தடுப்பூசி செலுத்திய மாநிலம் என்ற இலக்கை எட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்றார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மேலும் எடுக்கப்படவேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்றார். அமைச்சரை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் :- இரண்டு தவனை தடுப்பூசி, சமூக இடைவெளி, கை கழுவுதல், கட்டாயம் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட பொது சுகாதார வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.பதற்றத்திற்கான நேரம் இல்லை ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை மக்கள் அளிக்க வேண்டும் என்றார். 

click me!