அதிமுகவை அலறவிட்டு, திமுகவை திணறடித்த அமமுக தேர்தல் அறிக்கை.. மாஸ் காட்டும் டிடிவி.தினகரன்..!

By vinoth kumarFirst Published Mar 13, 2021, 11:04 AM IST
Highlights

தமிழகத்தில் மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு இனிமேல் அனுமதி இல்லை என்ற கொள்கை முடிவு உடனடியாக எடுக்கப்படும் என டி.டி.வி.தினகரன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு இனிமேல் அனுமதி இல்லை என்ற கொள்கை முடிவு உடனடியாக எடுக்கப்படும் என டி.டி.வி.தினகரன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அமமுகவின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், கூட்டணிக் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, அமமுகவின் தேர்தல் அறிக்கையை டி.டி.வி.தினகரன் வெளியிட்டார். 

தேர்தல் அறிக்கை விவரம்:-

*  மாதம் ஒரு மாவட்டத்தில் முதல்வர் நேரடியாக பங்கேற்கும் மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.

* அம்மா உணவகங்கள் சீரமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் விரிவாக்கப்படும். குறைந்தபட்சம் பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் தோறும் அம்மா உணவகங்கள் செயல்படுத்தப்படும்.

*  மின் கட்டணம் மாதம்தோறும் செலுத்தும் முறை மீண்டும் கொண்டுவரப்படும்.

* தமிழகத்தில் மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு இனிமேல் அனுமதி இல்லை என்ற கொள்கை முடிவு உடனடியாக எடுக்கப்படும்.

*  வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். புரட்சிகரமான இந்தத் திட்டம் ‘அம்மா பொருளாதார புரட்சித் திட்டம்’ என்ற பெயரில் அழைக்கப்படும்.

* தமிழ்நாட்டில் சட்ட மேலவை மீண்டும் உருவாக்கப்படும்.

*  6ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்.

*  கியாஸ் சிலிண்டருக்கு தலா ரூ.100 மானியம் வழங்கப்படும்.

*  45 வயது வரையிலான ஆண்களுக்கும் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும். பணிக்கு செல்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

*  மகளிர் இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க ரூ.1 லட்சம்  வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

*  10ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு தாலிக்கு 8  கிராம் தங்கம், ரூ.50,000  வழங்கப்படும்.

*  இடஒதுக்கீட்டில் அனைத்து சமூகங்களும் சம உரிமை  மற்றும் சம நீதியைய் பெறும் வகையில் சரியான நிலைப்பாடுஎடுக்கப்படும்.

*  நெல் குவிண்டாலுக்கு ரூ.30,000 விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

*  அம்மா கிராப்புற வங்கிகள் ஏற்படுத்தப்படும்.

*  சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். 

*  தமிழகம் லஞ்ச, ஊழல்  இல்லாத முதன்மை மாநிலமாக உருவாக்கப்படும்.

*  தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே நீடிக்கும்.

*  பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும்.

click me!