Oil bond : காங்கிரஸ் வைச்ச எண்ணெய் பத்திர கடன்.. வட்டியும் அசலையும் பாஜக அடைக்குது.. அண்ணாமலை ஆவேசம்.!

Published : Apr 04, 2022, 10:35 PM IST
Oil bond : காங்கிரஸ் வைச்ச எண்ணெய் பத்திர கடன்.. வட்டியும் அசலையும் பாஜக அடைக்குது.. அண்ணாமலை ஆவேசம்.!

சுருக்கம்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உருவாக்கிய ரூ.1.3 லட்சம் கோடி எண்ணெய் பத்திரத்தை 2014- இல் எங்கள் அரசு மரபு உரிமையாக பெற்றது அனைவருக்கும் தெரியும். நம் அரசாங்கம் இன்றுவரை அசல், வட்டியாக ரூ. 93,685 கோடி செலுத்தியுள்ளது என்பது நமக்குத் தெரியுமா?

காங்கிரஸ் அரசு வெளியிட்ட ரூ.1.3 லட்சம் கோடி பத்திரத்திற்கு, பாஜக அரசு ரூ.2.6 லட்சம் கோடியை திருப்பிச் செலுத்தி வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

 நிர்மலா விளக்கம்

ஐந்து மாநில தேர்தல் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கிவிட்டன. இந்த விலை உயர்வுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுபற்றி விளக்கம் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “முந்தைய காங்கிரஸ் அரசு பெட்ரோலிய பொருட்களை குறைந்த விலையில் விற்பதற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 2 லட்சம் கோடி மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்கள் வினியோகிக்கப்பட்டன. 2026-ம் ஆண்டு வரை எண்ணெய் பத்திரங்களை மீட்பது நீடிக்கும் என்பதால், இன்னும் 5 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசல் மீது மக்கள் பணம் செலுத்த வேண்டி இருக்கும்” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

ப. சிதம்பரம் பதிலடி

 நிர்மலா சீதாராமனின் இந்தக் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் 2014-இல் மோடி அரசு வந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் மக்களிடமிருந்து வசூலித்த வரி தொகை பற்றி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்ட பதிவில், “மத்திய பாஜ அரசு கடந்த 8 ஆண்டுகளில் எரிபொருள் வரியாக ரூ.26,51,919 கோடியை வசூலித்துள்ளது. நாட்டில் சுமார் 26 கோடி குடும்பங்கள் உள்ளன. அந்த வகையில், ஒவ்வொரு குடும்பத்திடம் இருந்தும் சராசரியாக எரிபொருள் வரியாக அரசு ரூ.1 லட்சத்தை வசூலித்துள்ளது. இவ்வளவு பெரிய தொகையை எரிபொருள் வரியாக செலுத்தியதற்கு ஈடாக, மத்திய அரசு என்ன செய்தது? இதை ஒவ்வொரு குடும்பத்தினரும் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்” என்று ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார். 

அண்ணாமலை கணக்கு

ப. சிதம்பரத்தின் இந்தக் கருத்தை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் அரசில் வழங்கப்பட்ட எண்ணெய் பத்திரங்கள் தொடர்பாகவும் கடன் ஏற்பட்டது தொடர்பாகவும் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உருவாக்கிய ரூ.1.3 லட்சம் கோடி எண்ணெய் பத்திரத்தை 2014- இல் எங்கள் அரசு மரபு உரிமையாக பெற்றது அனைவருக்கும் தெரியும். நம் அரசாங்கம் இன்றுவரை அசல், வட்டியாக ரூ. 93,685 கோடி செலுத்தியுள்ளது என்பது நமக்குத் தெரியுமா? மேலும் 2026-ஆம் ஆண்டுக்கு முன் வட்டி மற்றும் அசல் தொகை ஆகிய இரண்டிலும் ரூ.1.67 லட்சம் கோடியை நாங்கள் திருப்பிச் செலுத்த வேண்டும்.

மன்மோகன் சிங் சொன்னது என்ன?

காங்கிரஸ் வெளியிட்ட ரூ.1.3 லட்சம் கோடி பத்திரத்திற்கு, எங்கள் அரசாங்கம் ரூ.2.6 லட்சம் கோடியை (வட்டி + அசல்) திருப்பிச் செலுத்த வேண்டும். ஜூன் 4, 2008 அன்று, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார்: “இருப்பினும், எண்ணெய் நிறுவனங்களுக்குப் பத்திரங்களை வழங்குவதும் பற்றாக்குறையை ஏற்றுவதும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு அல்ல என்பதை தேசம் நினைவில் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய எங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமே நாங்கள் எங்கள் சுமையை அனுப்புகிறோம்.” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி