அடகடவுளே.. அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்திற்குள் 3 வது அலை.. அலறும் மருத்துவ வல்லுநர்கள்.

By Ezhilarasan BabuFirst Published Oct 4, 2021, 3:23 PM IST
Highlights

ஏனெனில் பெரும்பாலானோர் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர், இன்னும் பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதால் நோய் தாக்கம் என்பது வீரியம் மிக்கதாக  இருக்க வாய்ப்பில்லை என அவர் எச்சரித்துள்ளார். 

கொரோனா மூன்றாவது அலை இந்தியாவைத் தாக்க வாய்ப்புள்ளதாகவும் அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்திற்குள் அது உருவாகக்கூடும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்த தகவல்  ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த நாடுகளையும் கபளீகரம் செய்துள்ளது. கிட்டத்தட்ட இந்த வைரசால் 180க்கும் அதிகமான நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை மிகத்தீவிரமாக பரவியதால், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஏராளமான உயிரிழிப்பையும், பொருளாதார இழப்பையும் சந்தித்துள்ளது. இந்நிலையில் விரைவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படக்கூடும் என தொடர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் எச்சரித்து வரும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல்வேறு மாநிலங்களில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தென் இந்தியாவை பொருத்தவரையில், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கைலாஷ் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் மகேஷ் ஷர்மா, கொரோனா 3வது அலை இன்னும் 2 மாதங்களில் தொடங்க வாய்ப்பு உள்ளது என எச்சரித்துள்ளார். அக்டோபர், டிசம்பர் மாதத்திற்குள் 3வது அலை இந்தியாவை தாக்கும் என்றும், அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இரண்டாவது அலையின்போது மருத்துவ சேவை ஊழியர்களும், மருத்துவமனைகளும் அதை எதிர்கொள்ள மனதளவில் தயாராக இல்லை என்றும், ஆக்சிஜன் தட்டுப்பாடு, ரெம்டெசிவர் பற்றாக்குறை போன்றவை நிலவியது, ஆனால் இரண்டாவது அலையை போல மூன்றாவது அலை தீவிரமாக இருக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.

ஏனெனில் பெரும்பாலானோர் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர், இன்னும் பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதால் நோய் தாக்கம் என்பது வீரியம் மிக்கதாக  இருக்க வாய்ப்பில்லை என அவர் எச்சரித்துள்ளார். மேலும் இது குறித்து தெரிவித்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலொரியா, அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்கள் நாம் மிக எச்சரிக்கையாக இருந்தால், ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பையும் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்றும், எதிர்வரும் காலங்கள் பண்டிகை காலம் என்பதால் அனைவரும் மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.
 

click me!