தமிழக அமைச்சரவையில் மாற்றம்... புதிய அமைச்சர்கள் பட்டியல்..? சாட்டையை சுழற்றும் மு.க.ஸ்டாலின்.!

By Thiraviaraj RMFirst Published Oct 4, 2021, 1:44 PM IST
Highlights

ஆரம்ப காலம் தொட்டு அமைச்சர்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து அவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கி வந்தது திமுக தலைமை.
 

திமுக ஆட்சி அமைத்தவுடன் ஆறு மாத காலம் முடிந்ததும் அமைச்சர்களின் செயல்பாடுகளை வைத்து அவர்களின் இலாகாக்களை மாற்றலாம் அல்லது புதிய அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெற வைக்கலாம் என திமுக திட்டமிட்டிருந்தது. ஆரம்ப காலம் தொட்டு அமைச்சர்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து அவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கி வந்தது திமுக தலைமை.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. அந்தவகையில் அமைச்சரவையின் புதிய பட்டியலை மாற்ற இருப்பதாக திமுக மேல்மட்ட நிர்வாகிகளிடையே பேச்சுக்கள் எழுந்துள்ளது. அந்தப் பட்டியலில் திமுக சீனியர் அமைச்சரான ஐ.பெரியசாமி, ’’தான் எதிர்பார்த்த துறை தனக்கு கிடைக்கவில்லை’’என ரொம்பவே மன வருத்தத்தில் இருந்து வந்தார். ஸ்டாலினிடமும்  நேரடியாக எடுத்துச் சொல்லியுள்ளார். இந்நிலையில் செந்தில்பாலாஜியிடம் இருக்கிற மின்சாரத்துறையை கூட்டுறவு துறை அமைச்சராக உள்ள ஐ.பெரியசாமியிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆகியவற்றுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி இருப்பார் எனக் கூறப்படுகிறது. 

சீனியர் அமைச்சர் துரைமுருகனும், ’எனக்கு வேண்டிய துறைகள் கிடைக்க வில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் எ.வ.வேலுவிடம் இருக்கும் பொதுப்பணித் துறையை கூடுதல் பொறுப்பாக துரைமுருகனிடம் ஒப்படைக்க முகஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நெடுஞ்சாலைத் துறையை மட்டும் எ.வ,வேலு கவனிப்பார். பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதித்துறையை எப்படியாவது  வாங்க வேண்டும் என்று பலரும் காய் நகர்த்தி வந்தனர். , பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மு.க.ஸ்டாலின் குட் புக்கில் இடம் பிடித்திருந்ததால் அவரது பதவியை அவரிடம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இவரைப் போலவே இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் முதல்வரின் குட்புக்கில்  இடம்பிடித்துள்ளார். அதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒருவரும் கூட அமைச்சர் பதவி இல்லாததால் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த திமுக எம்எல்ஏ ஒருவர் அமைச்சராக கூடும் எனக் கூறப்படுகிறது. சபாநாயகராக உள்ள அப்பாவு, அமைச்சராக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சபாநாயகராக கு.பிச்சாண்டி, துணை சபாநாயகராக சின்ன சேலத்தை சேர்ந்த உதயசூரியன் ஆகியோர் இருப்பார்கள் என்கிறார்கள் ஆனால் விசாரித்த வரையில் அப்பாவு அமைச்சர் ஆவதற்கு வாய்ப்புகள் மிகமிக குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நாடார் சமூகத்தை சேர்ந்த மனோ தங்கராஜ், கீதா ஜீவன் ஆகியோர் அமைச்சராக இருப்பதால் அப்பாவுவுக்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அனிதா ராதாகிருஷ்ணன், மதி வேந்தன் ஆகியோர் செயல்பாடுகள் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. இதனை உளவுத்துறை மூலம் முக ஸ்டாலினுக்கு இப்படி அளித்துள்ளது. மனோ தங்கராஜ், போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வழங்கலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

click me!