மாமனார் ஊரில் மணல் கொள்ளை நடத்துகிறார் ஓ.பி.எஸ். மகன்: துணைமுதல்வருக்கு எதிராக வெடிக்கும் புகார்!

By manimegalai aFirst Published Dec 15, 2018, 12:28 PM IST
Highlights

தர்மம் இருந்ததோ! இல்லையோ ஆனால்  ’தர்மயுத்தம்’ நடத்தியபோது ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகப்பெரிய அளவில் மக்கள் செல்வாக்கு இருந்தது. உண்மையை சொல்வதானால் அந்த நேரத்தில் அ.தி.மு.க. ஆட்சி கலைந்திருந்தால் அடுத்து நடந்திருக்கும் தேர்தலில் ஸ்டாலினுக்கும், பன்னீர்செல்வத்துக்கும் இடையில்தான் பெரும் போர் நிகழ்ந்திருக்கும். பன்னீர் அணி ஜெயித்து, அவர் முதல்வர் ஆகியிருந்தாலும் கூட ஆச்சரியமில்லை. அந்தளவுக்கு மக்களின் கரிசனத்தையும், பரிதாபத்தையும், செல்வாக்கையும் பெற்று வைத்திருந்தார் பன்னீர். 

தர்மம் இருந்ததோ! இல்லையோ ஆனால்  ’தர்மயுத்தம்’ நடத்தியபோது ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகப்பெரிய அளவில் மக்கள் செல்வாக்கு இருந்தது. உண்மையை சொல்வதானால் அந்த நேரத்தில் அ.தி.மு.க. ஆட்சி கலைந்திருந்தால் அடுத்து நடந்திருக்கும் தேர்தலில் ஸ்டாலினுக்கும், பன்னீர்செல்வத்துக்கும் இடையில்தான் பெரும் போர் நிகழ்ந்திருக்கும். பன்னீர் அணி ஜெயித்து, அவர் முதல்வர் ஆகியிருந்தாலும் கூட ஆச்சரியமில்லை. அந்தளவுக்கு மக்களின் கரிசனத்தையும், பரிதாபத்தையும், செல்வாக்கையும் பெற்று வைத்திருந்தார் பன்னீர். 

ஆனால் என்று அவர் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தாரோ, அந்த நொடியே மக்கள் செல்வாக்கை முற்றிலுமாக இழந்தார். ’அவர் முகத்தில் பழைய அருள் இல்லை! உண்மை இல்லை!’ என்று சாமான்யனும் பன்னீரை விமர்சித்து தள்ளுகிறான். இது பன்னீருக்கு நன்றாகவே புரிகிறது. ஆனாலும் சூழல் அப்படி. மேலிடத்து உத்தரவும், இனி அ.தி.மு.க. எழுமா? எனும் சூழல் இருக்கையில் இன்று விட்டால் இனி என்று அதிகாரத்தையும் அது கொண்டு வரும் செகளரியங்களையும் அனுபவிப்பது? எனும் வழக்கமான அரசியல்வாதி ஆசையும் சேர்ந்து அவரை  பதவியில் பசைபோட்டு ஒட்டியுள்ளது. 


மீண்டும் வந்து இணைந்து,  பதவி பெற்றிருக்கும் பன்னீர்செல்வத்தை எடப்பாடியார் தரப்பினர் பெரிதாய் மதிப்பதில்லை! என்பது கண்கூடு. இது ஒரு புறமிருக்க, பன்னீர்செல்வம் தரப்பானது அடிக்கடி சர்ச்சை புகார்களில் மாட்டிக் கொள்வதும் தனிகூத்து. குறிப்பாக அவரது மகன் ரவீந்திரநாத் மீது இப்போது வெடித்திருக்கும் ‘மணல் கொள்ளை’ குற்றச்சாட்டு உண்மையிலேயே பெரும் அதிர்ச்சியை தருகிறது. 

தென் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு நீர் ஆதாரமே தாமிரபரணி ஆறுதான். அதில் பல காலமாக நடந்த மணல் குவாரி மற்றும் மணல் கொள்ளைக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணு பெரும் போராட்டம் நடத்தி, நிரந்தரத் தடையை கோர்ட்டில் வாங்கினார். 


இந்த சூழலில்  மீண்டும் இப்போது துவங்கிவிட்டதாம் மணற்கொள்ளை. இதை நடத்துவது துணைமுதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்! என்பதுதான் ட்ரிபிள் அதிர்ச்சியே. அதாவது திருநெல்வேலி அருகே திருமலைக்கொழுந்துபுரம், மடத்துப்பட்டி ஆகிய  இடங்களில் லாரிகளில் ஆற்று மணல் அள்ளப்படுகிறது. இதை வீடியோ எடுத்த சில இளைஞர்கள் புகார்  தெரிவித்துள்ளனர். விசாரணையின் இறுதியில் ‘அது ஆற்று மணல் இல்லை, சவுடு மணல்தான். அரசே வழங்கிய அனுமதியின் அடிப்படையில் இது நடக்கிறது.’ என்று ஊத்தி மூடிவிட்டு, தொடர்ந்து மணற்கொள்ளை நடக்க கண்சாடை காட்டிவிட்டார்களாம். 


இந்நிலையில், வழக்கறிஞர் உச்சிமாகாளி என்பவர் ‘இந்த மணற்கொள்ளைக்கு மூல காரணமே துணை முதல்வரின் மகன் ரவீந்திரநாத் தான்.’ என்று கலெக்டர் ஷில்பாவிடம் புகார் கொடுத்துள்ளார். பாளையங்கோட்டையை சேர்ந்த அ.தி.மு.க. புள்ளி அர்பன் ரவி என்பவரின் மூலமாக ரவீந்திரநாத் இந்த வேலையை செய்கிறார்! என்று வெளிப்படையாக புகார் சொல்லியுள்ளார் உச்சிமாகாளி. 
இதற்கிடையில் சமூக ஆர்வலர் சுடலைக்கண்ணு என்பவரும், “துணைமுதல்வர் பன்னீரின் மகன் ரவீந்திரநாத், நெல்லை மாவட்டம் கீழப்பாட்டத்தை சேர்ந்த ரிட்டயர்டு போலீஸ் அதிகாரி ஒருவரோட பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணியிருக்கார். அந்த வகையில் அடிக்கடி இந்த ஊருக்கு வரும்போது தாமிரபரணியை கவனிச்சிருக்கார். பிறகுதான் இங்கே மண்ணள்ளும் வேலையை லோக்கல் அ.தி.மு.க. ஆளுங்களுடன் இணைந்து பண்ண துவங்கியிருக்கார். உடனே நாங்க ஐகோர்ட்டுக்கு போயி இந்த கடத்தலை தடுத்து நிறுத்தி, திருமலைக்கொழுந்துபுரத்தில் மணல் கொள்ளையை  நிறுத்தினோம்.  உடனே அவங்க ஆற்றோட வடகரையில் அள்ள துவங்கியிருக்காங்க. இதுக்கு வருவாய் துறை, கனிமவளத்துறை அதிகாரிகள் முழு சப்போர்ட். 


ஆட்சியரிடம் தொடர்ந்து புகார் கொடுத்துட்டே இருக்கிறோம். சட்டம் தன் கடமையை செய்யலேன்னா, துணை முதல்வர் மற்றும் அவரது மகனுக்கு எதிராக போராட்டத்துல உட்கார்ந்துடுவோம்.” என்று ஆவேசப்பட்டிருக்கிறார். 

இந்த நிலையில், மகன் செய்யும் இந்த அட்டூழியம் பற்றி வெளிப்படையாக புகார் வந்தும் கூட, அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் பன்னீர்செல்வம் இருக்கிறார்! ஆட்சி முடிவதற்குள் இந்த மாநிலத்தை மொட்டையடித்துவிடுவார்கள்! என்று பிரசாரம் செய்தபடி இந்த விவகாரத்துக்கு எதிராக களமிறங்கியிருக்கிறது தென்மண்டல தி.மு.க. ஓ.பன்னீர்செல்வத்தின் ரியாக்‌ஷன் என்ன? கவனிப்போம்!
 

click me!