’தி.மு.க.வுல சேர்றதுக்குப் பதில் தூக்குல தொங்கிருவேன்’... வதந்திகளுக்கு பதில் சொல்றவரு யாரு தெரியுமா?

Published : Dec 15, 2018, 11:55 AM IST
’தி.மு.க.வுல சேர்றதுக்குப் பதில் தூக்குல தொங்கிருவேன்’... வதந்திகளுக்கு பதில் சொல்றவரு யாரு தெரியுமா?

சுருக்கம்

டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தமது ஆதரவாளர்களுடன் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார். செந்தில் பாலாஜியை தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட சில எம்எல்ஏக்களும் திமுகவிற்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகி அரசியல் களத்தை வைப்ரேஷன் மோடில் வைத்துள்ளது. 

முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திமுகவுக்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் அவர் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தமது ஆதரவாளர்களுடன் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார். செந்தில் பாலாஜியை தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட சில எம்எல்ஏக்களும் திமுகவிற்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகி அரசியல் களத்தை வைப்ரேஷன் மோடில் வைத்துள்ளது. 

இந்நிலையில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திமுகவில் இணைய இருப்பதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. 

கடந்த சட்டசபை தேர்தலில் இருந்தே, ஜெயலலிதாவால் ஒதுக்கிவைக்கப்பட்டவர் நத்தம் விஸ்வநாதன். சட்டசபை தேர்தலில் நத்தம் தொகுதிக்குப் பதிலாக ஆத்தூர் தொகுதியில் போட்டியிட வைத்தார் ஜெயலலிதா. அங்கு திமுகவை சேர்ந்த ஐ.பெரியசாமியிடம் தோல்வியைத் தழுவினார். 

அதன்பின்னர், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், ஓபிஎஸ் முதல்வரானபோதும் கூட நத்தம் விஸ்வநாதன் தீவிர அரசியலில் ஆர்வம் காட்டவில்லை.

ஓபிஎஸ் தர்மயுத்தத்தை தொடங்கியபோது, அவரது அணியில் ஐக்கியமானார். இதனை தொடர்ந்து, ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் இணைந்த நிலையிலும், நத்தம் விஸ்வநாதனுக்கு திண்டுக்கல் மாவட்ட அரசியலில் முக்கியத்துவம் கொடுக்காமல் ஒதுக்கி வைத்தார் அமைச்சர் சீனிவாசன்.

 இதனால், கடும் அதிருப்தியில் இருந்த நத்தம் விஸ்வநாதன் திமுகவுக்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் திமுகவிற்கு தாவப் போவதாக வரும் செய்திகள் வெறும் வதந்தி என அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.  

"சுயமரியாதையை விற்று, அந்த ஈனப் பிழைப்பு பிழைப்பதற்கு தூக்கில் தொங்கலாம். ஒருபோதும் நான் திமுக பக்கம் போகமாட்டேன்" என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!