கழட்டிவிட ரெடியாகும் எடப்படியார்... எந்த நேரத்திலும் வெடித்துக் கிளம்பி வெளியே வரும் தர்மயுத்த தலைவன்! எதற்காக? நடந்தது என்ன?

First Published May 22, 2018, 11:28 AM IST
Highlights
O Panneerselvam will Start Dharma Yutham against edappadiyaar


கடந்த சில வாரங்களாக எடப்பாடியார்- தர்மயுத்த நாயகன் பன்னீர்க்கும் மோதல் செய்திதான் பேச்சாக இருக்கிறது. மேலும் எடப்படியாருக்கு  எதிராக எந்த நேரத்திலும் வெடித்துக் கிளம்பி வெளியே வரலாம் என தகவல்கள் கசிகின்றன.

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அந்த இடத்திற்கு வந்தார் பன்னீர். அவரை பதவிலக சொல்லி வற்புறுத்திய காரணத்தால், நேராக கடற்கரையில் இருக்கும் ஜெயலலிதாவின் சாமாதியில் தர்ம யுத்தம் தொடங்கினார். இதனையடுத்து பதவியை பறித்து ஆட்சி அரியாசனத்தில் ஏற முயன்ற சசி ஒட்டுமொத்த எம்.எல்.ஏக்களையும் கூவத்தூர் சொகுசு விடுதியில் சிறைவைத்து எடபபாடியாரில் தமிழகத்தின் சாவிக்கொத்தை கொடுத்துவிட்டு ஆக்ராஹாராவிற்க்கு சென்றுவிட்டார். இதையடுத்து  தனியாகப் பிரிந்து நின்றார் பன்னீர்.

அவருக்குப் பின்னாலும் நிர்வாகிகள் அணி வகுத்து நின்றனர். சசிகலா எதிர்ப்பு அரசியல் என்பதுதான் பன்னீருக்கு பலம் சேர்ந்தது.
இதனைடுத்து, அணைகளை ஒன்று செர்ந்தால்தால் கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்றமுடியும் என்ற காரணத்தால், தர்மயுத்தம் நடத்திவந்த பன்னீருடன் கைகோர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த எடப்படியாரிடம், ‘சசிகலா குடும்பத்தைக் கட்சியிலிருந்து ஒதுக்கினால் இணைப்புக்கு ரெடி...’ என தூதுவிட்டார் பன்னீர். எல்லாம் ஓகே ஆனது. சசிகலா குடும்பத்தை அதிமுகவிலிருந்து ஒதுக்கினார் எடப்பாடியார். பின்னர் பன்னீர் அதிமுகவுக்குள் வந்தார்.

துணை முதல்வர் பதவியில் அமர்ந்தார். ஆரம்பத்தில் எல்லா விஷயங்களிலும் பன்னீருடன் கலந்து முடிவெடுத்தார் எடப்பாடியார். சில மாதங்களாகவே எடப்பாடிக்கும் பன்னீருக்கும் இடையில் இடைவெளி அதிகமாகிக்கொண்டே போவதாக பேச்சு வந்தபடியே இருந்தது. ஆனால் அதற்கு யாரும் பதில் சொல்லவோ விளக்கம் கொடுக்கவோ இல்லாத நிலையில் நேற்று அமைச்சர் ஜெயகுமார் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, ‘முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை. அப்படி இருக்க வேண்டும் என்பது சிலரது விருப்பம்’ என விளக்கம் கொடுத்தார்.

ஆனால் பன்னீர் ஆதரவாளர்கள் சிலர், ‘அமைச்சர் ஜெயகுமார் அப்படிச் சொன்னாலும், என்ன நடந்துட்டு இருக்கு என்பது அவருக்கும் தெரியும். கட்சிக்குள்ளும் சரி... ஆட்சியிலும் சரி எந்த முடிவெடுப்பதாக இருந்தாலும் ஓபிஎஸ்ஸிடம் எடப்பாடி கேட்பதே இல்லை. எல்லாமே அவர் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். இதுவரை நடந்த பல அரசு விழாக்களில் பங்கேற்கக்கூட ஓபிஎஸ்ஸை அழைக்கவே இல்லை. இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஏற்காடு கோடை விழா, ஊட்டி கோடை விழா என முதல்வர் போனார். ஆனால் எந்த விழாவுக்கும் ஓபிஎஸ்ஸைக் கூப்பிடவில்லை.

அதேபோல, அதிகாரிகளுக்கும் முதல்வரிடமிருந்து உத்தரவு போயிருக்கிறது. ஓபிஎஸ் அண்ணன் எந்த பைலைக் கொடுத்தாலும் அதிகாரிகள் கண்டுக்குறதே இல்லை. ‘சி.எம்.கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுங்க சார்...’ என்று பல ஃபைல்களைக் கிடப்பில் போட்டு வெச்சுட்டாங்க. கோடை விழாவுக்கு ஏன் துணை முதல்வரை கூப்பிடலைன்னு முதல்வரிடம் கேட்டதுக்கு, ‘எல்லோரும் ஒரே இடத்துக்கு எதுக்குப் போகணும்... அவருக்கும் பல வேலைகள் இருக்கும்’னு சொல்லியிருக்காரு.

எல்லோரும் ஒரே இடத்துக்குப் போனால், அவருக்கான செல்வாக்கு குறைந்துடும்னு எடப்பாடி நினைக்க ஆரம்பிச்சுட்டாரு. அதனால்தான் இவரை அவாய்டு பண்ணிட்டு இருக்காரு என சொல்கிறார்கள்.

அதெல்லாம் இருக்கட்டும், முதல்வர் பதவி என்பது எடப்பாடியாருக்கு புதுசா இருக்கலாம். ஆனா எங்க அண்ணணுக்கு அதெல்லாம் பெரிய மேட்டரே இல்ல. மூன்று முறை CM சீட்டுல உட்கார்ந்துட்டுதான் வந்திருக்காரு. இப்போகூட எங்க அண்ணன் விட்டுக் கொடுத்த இடத்தில்தான் எடப்பாடி உட்கார்ந்திருக்காரு. அதை அவரு புரிஞ்சுக்கவே இல்லை. ஓபிஎஸ்ஸை விட்டு விலகிப் போகப் போக ஆபத்து எங்களுக்கு இல்லை.

அவருக்குதான்! இப்படியே போய்ட்டு இருந்தால், எடப்பாடியாரை எதிர்த்து எங்க அண்ணன் இன்னொரு “தர்ம யுத்தம்” தொடங்க ரொம்ப நாள் ஆகாது. நாங்களும் எவ்வளவு நாளைக்குத்தான் எல்லா அவமானங்களையும் பொறுத்துக்க முடியும்?’ என கொந்தளிக்கிறார்கள்.
ஆனால் எடப்பாடியார் கோஷ்ட்டியோ, ‘பன்னீருக்குப் பல இடங்களில் அவர் துணை முதல்வர் என்பதே மறந்துடுது.

ஏதோ அவரே முதல்வர் போல எல்லோரிடமும் அதிகாரம் பண்ணிட்டு ஆட்டம் போடுறாரு. அவரு எந்த யுத்தம் வேண்டும்னாலும் தொடங்கட்டும். அதனால எங்களுக்கு லாஸ் இல்லை. எல்லாமே அவருக்குதான்!’ என தெளிவாகச் சொல்கிறார்கள். ஆக, எடப்பாடியாருக்கு எதிராரக எந்த நேரத்திலும் வெடித்துக் கிளம்பி வெளியே வரலாம் என சொல்லப்படுகிறது.

click me!