சுயநலத்திற்காக ஈபிஎஸ் - ஓபிஎஸ் சண்டை போட்டுக்கொள்வதாக குற்றம்சாட்டி, அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் கோவை செல்வராஜ்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததிலிருந்தே அதிமுகவில் கோஷ்டி பூசல் நீடித்துவருகிறது. ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகளுக்கு இடையே மோதல் நீடித்துவருகிறது. அதிமுக ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக 2018 ஆகஸ்ட்டில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் ஒன்றாக இணைந்து ஆட்சியை நடத்தினர்.
2021 வரை ஆட்சியை நடத்தவேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே இரு தரப்பும் இணைந்தது. இணைந்த பின்னரும் பரஸ்பர புரிதல் இருக்கவில்லை. கடமைக்காகவே இணைந்திருந்தனர். 2021 சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின் மீண்டும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே மோதல் வெடித்தது. இரட்டை குழல் துப்பாக்கியாக அவர்கள் பெயரளவில் இருந்துவந்த நிலையில், அதிமுக ஒற்றைத்தலைமையை நோக்கி நகர்ந்தது. அதனால் அதிமுகவில் யார் பெரியவர், பலமானவர் என்பதை நிரூபிக்க இருதரப்பும் முயன்றதில், ஈபிஎஸ் தரப்பு ஜெயித்துவிட்டது.
ஆவின் பச்சைப்பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு.. அதற்கு இதுதான் காரணம்.. அன்புமணி ராமதாஸ்..!
ஏற்கனவே தினகரன் அமமுக என்ற பெயரில் அதிமுகவை உடைத்த நிலையில், ஈபிஎஸ்-ஓபிஎஸ் இடையேயான மோதல் அதிமுகவின் பலத்தை குறைக்கவே செய்தது. அதிமுகவின் பெரும்பான்மையான முக்கிய தலைவர்கள் ஈபிஎஸ்-க்கு ஆதரவாகவே உள்ளனர்.
ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருந்த வெகுசிலரில் ஒருவர் கோவை செல்வராஜ். இந்நிலையில், அவரும் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ”ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் சுயநலத்திற்காக சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றனர். அதனால் அதிமுகவிற்கு எந்த பயனும் இல்லை. அதனால் அதிமுகவிலிருந்து விலகுவதாக” கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளராக இருந்து, ஈபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்துவந்த கோவை செல்வராஜ், அதிமுகவிலிருது விலகியிருக்கிறார்.