ஒபிஎஸ் அணியில் விழுந்தது அடுத்த விக்கெட்... ஈபிஎஸ் உடன் இணைந்த ஒபிஎஸ் ஆதரவாளர்!!

By Narendran S  |  First Published Dec 15, 2022, 10:20 PM IST

அடுத்தடுத்து ஓபிஎஸ் அணியினர் கட்சி தாவி வரும் நிலையில் தற்போது கிருஷ்ணகிரியை ஓபிஎஸ் அணி நிர்வாகி இபிஎஸ் அணியில் இணைந்துள்ளது ஓபிஎஸுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 


அடுத்தடுத்து ஓபிஎஸ் அணியினர் கட்சி தாவி வரும் நிலையில் தற்போது கிருஷ்ணகிரியை ஓபிஎஸ் அணி நிர்வாகி இபிஎஸ் அணியில் இணைந்துள்ளது ஓபிஎஸுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமானதை அடுத்து அதிமுக கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஓபிஎஸ் அணியினர் சிலர் மாற்றுகட்சிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் திடீரென திமுகவில் இணைந்தார்.

இதையும் படிங்க: மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கலனா என்ன நடக்கும்? அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு தகவல்..!

Tap to resize

Latest Videos

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தற்போது கிருஷ்ணகிரியை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி இபிஎஸ் அணியில் இணைந்துள்ளார். முன்னதாக ஓபிஎஸ் அணியில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கட்சி நிர்வாகிகளை நியமிப்பதில் குளறுபடிகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே அதிருப்தி ஏற்பட்டது. மேலும் ஓபிஎஸ் ஆதாரவாளர்கள் தங்களுக்கு பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதையும் படிங்க: விவசாயிகளை வஞ்சித்து வருவது வேதனை அளிக்கிறது… கவலை தெரிவிக்கும் பி.ஆர்.பாண்டியன் !!

இதனால் வேதனை அடைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கட்சி தாவலில் ஈடுப்படத்தொடங்கினர். அந்த காரணத்திற்காக தான் தற்போது ஓபிஎஸ் ஆதரவாளரான ஜே.கே.வெங்கடாசலம் இபிஎஸ் அணியுடன் இணைந்ததாக கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி தொகுதி அமைப்பாளராக பொறுப்பு வகித்த இவர் இபிஎஸ் அணியின் கே.பி.முனுசாமியை சந்தித்து அவரது ஆதரவாளர்களுடன் இபிஎஸ் அணியில் இணைந்தார். அடுத்தடுத்த நிர்வாகிகள் மாற்று கட்சிகளை நோக்கி படையெடுத்து வருவது ஓபிஎஸுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!