விவசாயிகளை வஞ்சித்து வருவது வேதனை அளிக்கிறது… கவலை தெரிவிக்கும் பி.ஆர்.பாண்டியன் !!

By Narendran SFirst Published Dec 15, 2022, 7:36 PM IST
Highlights

முதல்வர் வாய் திறக்காமல் விவசாயிகளை வஞ்சித்து வருவது வேதனை அளிப்பதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். 

முதல்வர் வாய் திறக்காமல் விவசாயிகளை வஞ்சித்து வருவது வேதனை அளிப்பதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மயிலாடுதுறை மாவட்டம் கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. சீர்காழி தரங்கம்பாடி தாலுக்கா விலை நிலங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு 100% அழிந்துவிட்டது. மறு உற்பத்திக்கு வாய்ப்பில்லை. இதனால் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. தமிழக அரசு மனசாட்சி இல்லாமல் நடந்து வருகிறது. இது பெரும் வேதனை அளிக்கிறது.

இதையும் படிங்க: இளைஞர்களிடம் முதலீடு செய்வதாக கூறி பண மோசடி… கோவை கார் குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாக கூறியதால் பரபரப்பு!

அதனால் இங்கு தினம் தோறும் போராட்ட களமாக நிலைமை மாறிவிட்டது. இதனால் மாவட்ட நிர்வாகம் முற்றிலும் முடங்கி போய் இருக்கிறது. தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்த அறிவிப்பும் கொடுக்காமல் மௌனம் காத்து வருவது வேதனை அளிக்கிறது. விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறார்கள். இதற்கு பல கட்ட போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். ஆனால் இதுவரைக்கும் முதல்வர் வாய் திறக்காமல் விவசாயிகளை வஞ்சித்து வருவது வேதனை அளிக்கிறது. தினம் தோறும் சாலைகள் முடக்கப்படுகிறது. ஈ.சி.ஆர் சாலை முடக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை போலீசில் ஒப்படைக்க வேண்டும்… பெற்றோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!

தமிழக முதலமைச்சரோ சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களோ பாதிப்பு குறித்து வாய் திறக்க மறுக்கிறார்கள். விவசாயிகள் வீதியில் நின்று கண்ணீர் வடித்து கதறுகிறார்கள். முதல்வர் வாய் திறக்க மறுப்பதால் மூன்று மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டு இருக்கிறோம். இந்த சாலை மறியல் ஈடுபட்டுள்ள விவசாயிக்கு கருணை காட்டுங்கள் முதலமைச்சரே. விவசாயிகள் கண்ணீர் வடிப்பதை வேடிக்கை பார்க்காதீர்கள் என்று தெரிவித்தார். முன்னதாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

click me!