அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்து பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், அவரது மகன் ஜெயபிரதீப் போட்ட பதிவு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்து பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், அவரது மகன் ஜெயபிரதீப் போட்ட பதிவு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சசிகலாவை அதிமுகவுக்குள் சேர்ப்பது குறித்து கட்சியின் தலைமை முடிவெடுக்கும் என்று சில தினங்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் பற்ற வைத்த நெருப்பு காட்டுத் தீ போல எரிந்து வருகிறது. சசிகலாவை சேர்ப்பது குறித்த ஓ.பன்னீர் செல்வத்தின் கருத்துக்கு ஜெயக்குமார், கே.பி.முனுசாமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவு நிர்வாகிகளான ஜேசிடி.பிரபாகர், செல்லூ ராஜூ, அன்வர் ராஜா உள்ளிட்டோர் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
undefined
இதையும் படிங்க;- வீர வசனம் பேசிவிட்டு நீங்களே இப்படி செய்யலாமா? டிடிவி கேட்ட ஒரே கேள்வி.. திக்குமுக்காடிய திமுக..!
இந்நிலையில் சசிகலா குறித்து நடக்கும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார். இந்நிலையில் கண்ணால் கண்பதும் பொய், காதல் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப் போட்ட பதிவு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- ஒரு சீடன் மற்றவர்கள் செய்த சிறிய தவறுகளைப் பற்றி உள்ளதும் இல்லாததுமான செய்திகளை மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவனாய் இருந்தான். அதனைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்புக் கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு, அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதை சிறிது சிறிதாகப் பிய்த்து காற்றில் ஊதி பறக்க விட்டு வரும்படி சொன்னார்.
சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னார். "சரி இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா". சீடன் திகைத்தான், இதென்ன ஆகிற செயலா? "குருவே அந்த பஞ்சு காற்றில் இந்நேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வரமுடியும்?" "ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்து திரும்பக் கொண்டு வரமுடியவில்லை.
மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி வதந்திகளைப் பறக்க விட்டு வந்து இருக்கிறாய். அவை யார் யார் வாயில் எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ?. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றை திரும்ப பெறமுடியும் என்று நினைக்கிறாயா?" அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது.
இதையும் படிங்க;- மதுரையில் அதிகாலை நடந்த பயங்கரம்.. ஏசியில் மின்கசிவு.. தூங்கிக் கொண்டிருந்த தம்பதி தீயில் கருகி உயிரிழப்பு..!
கண்ணீர் மல்க வெட்கித் தலை குனிந்த சீடன் அன்றிலிருந்து அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான். யாராவது ஒருவர் தங்களிடம் வந்து ஒரு விஷயத்தைப் பற்றி தெரிவித்தார் என்றால், அதை பொறுமையுடன் நன்கு சிந்தித்து ஆராய்ந்து தெளிவான உண்மை தகவல்களை மற்றவரிடம் தெரியப்படுத்துங்கள் என்று பதிவிட்டுள்ளார்.