அதிமுகவின் சட்டப்பேரவை எதிர்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவது தொடர்பாக உரிய விளக்கம் கேட்கபட்ட பின்பே சபாநாயகர் இறுதி முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது.
ஓபிஎஸ் நீக்கம்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை சர்ச்சைக்கு மத்தியில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்பட மூன்று பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதோடு, அதிமுக சார்பாக சட்டப்பேரவைக்கும் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டது தொடர்பாக கடிதமும் கொடுக்கப்பட்டது. அதிமுகவில் 66 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும்,துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் உள்ளனர். கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும் உள்ளனர். இந்தநிலையில் எதிர்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்க இபிஎஸ் முடிவு செய்துள்ளார். இதற்கான சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கூட இருப்பவர்களே முதுகில் குத்த போறாங்க..! எடப்பாடி பழனிசாமியை அலர்ட் செய்யும் திமுக எம்.பி
அப்பாவுக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ்
இந்த நிலையில் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை சுட்டிக்காட்டி அதிமுக சட்டமன்ற குழுவை மாற்றக் கூடாது என்றும், பொதுக்குழு சம்பந்தமாக நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் இருப்பதால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து மனுக்கள் அனுப்பினால் அதை நிராகரிக்க வேண்டும் என கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை சபாநாயகர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியிடம் கடிதம் மூலமாக உரிய விளக்கம் கேட்பார் என்று கூறப்படுகிறது. மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு இருப்பதால் அதையும் கருத்தில் கொண்டு தான் சபாநாயகர் இறுதி முடிவு எடுப்பார் சட்டப்பேரவை வட்டராங்கள் தெரிவிக்கிறது.
இதையும் படியுங்கள்