அய்யய்யோ 3வது அலை வரப்போகுது.. அடுத்த மாதத்திற்குள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கங்க. அலறும் ராதாகிருஷ்ணன்.

By Ezhilarasan BabuFirst Published Sep 25, 2021, 11:21 AM IST
Highlights

ஒவ்வொரு முறையும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தடுப்பூசி பெறுவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது, இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரத்ததான முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை  செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். 

அடுத்த ஒரு மாதத்திற்குள் அனைவரும் தானாக முன்வந்து தடுப்பூசிகளை தெளித்துக் கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் நலவாழ்வு துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் சுமார் 22 லட்சம் பேர் இரண்டாவது தவணை செலுத்தி கொள்ளாமல் இருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி தற்போது அது நல்ல கட்டுக்குள் வந்துள்ளது. ஆனாலும் கேரளா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில் வைரஸ் தாக்கும் மீண்டும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் இரண்டாவது அலை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல் மூன்றாவது அறை இந்த ஆண்டின்  இறுதியில் உச்சத்தை எட்ட வாய்ப்பு இருக்கிறது என்பதால் முன்னெச்சரிக்கையாக மாநில மக்களுக்கு குல தடுப்பூசிகளை செலுத்த பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ஒவ்வொரு முறையும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தடுப்பூசி பெறுவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது, இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரத்ததான முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை  செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ காப்பீடுகள் குறித்த கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது என்றார். லட்சங்களில் இருந்து தமிழகத்தில் கொரோனா தோற்று ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது என்றார். 1500 என இருந்து வந்த கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்திருப்பது கவலை அளிக்கிறது என்றார். 

தற்போது கொரோனா பரவல் சூழலைப் புரிந்துகொண்டு மக்கள் அதற்கேற்றவகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் 22 லட்சம் பேர் இரண்டாவது தவணை செலுத்தி கொள்ளவில்லை என்றார், முதியோர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றார். அடுத்த மாதத்திற்குள் அனைவரும் தானாக முன்வந்து தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களில் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இந்தாண்டின் இறுதியில் அதாவது நவம்பர், டிசம்பர் மாதங்களில் 3வது அலை பரவக்கூடும் என்பதால் அடுத்த மாதத்திற்குள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்ற முனைப்பில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடதக்கது. 
 

click me!