இனி 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் திமுக ஆட்சியே தொடரும்.. மார்தட்டும் அமைச்சர்..!

Published : Sep 25, 2021, 10:39 AM IST
இனி 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் திமுக ஆட்சியே தொடரும்.. மார்தட்டும் அமைச்சர்..!

சுருக்கம்

திமுக அரசு பொறுப்பேற்று 5 மாதங்கள் கூட நிறைவடையவில்லை. அதற்குள் சொன்ன வாக்குறுதிகள் மட்டுமல்ல, எல்லாவற்றையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தினமும் புதிய திட்டங்களை அறிவிப்பதால் உலக அளவில் அவர் பாராட்டுகளை பெற்று வருகிறார். 

முதல்வர் மு.க. ஸ்டாலின் 16 அடி பாய்ந்தால் அவருடைய மகன் 32 அடி பாய்வது போல் செயலாற்றுகிறார் என்று உதயநிதியை அமைச்சர் காந்தி புகழ்ந்து பேசியுள்ளார். 

ராணிப்பேட்டை மாவட்ட திமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று வாலாஜா ஒன்றியத்தில் திமுக சார்பில் ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், கைத்தறி துணிநூல் துறை அமைச்சருமான காந்தி கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

அப்போது, திமுக அரசு பொறுப்பேற்று 5 மாதங்கள் கூட நிறைவடையவில்லை. அதற்குள் சொன்ன வாக்குறுதிகள் மட்டுமல்ல, எல்லாவற்றையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தினமும் புதிய திட்டங்களை அறிவிப்பதால் உலக அளவில் அவர் பாராட்டுகளை பெற்று வருகிறார். கடந்த காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோதே நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக 60 சதவீத வெற்றியைப் பெற்றது. தற்போது திமுக ஆட்சியில் உள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றியைப் பெற வேண்டும். 

இனி 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் திமுக ஆட்சியே தொடரும். வேறு ஆட்சி தமிழகத்தில் அமைய வாய்ப்பே இல்லை. தாய் 16 அடி பாய்ந்தால் குட்டி 32 அடி பாயும் என்று சொல்லுவார்கள். ஸ்டாலின் 16 அடி பாய்ந்தால் அவரது மகன் 32 அடி பாய்வது போல் செயலாற்றுகிறார் என்று அமைச்சர் காந்தி பேசினார்.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்