அய்யோ.. " வீடு புகுந்து வாயில் வெட்டுவார்களாம் ".. காவல் ஆணையர் அலுவலகத்தில் கதறிய பாஜக நாராயணன்.

By Ezhilarasan BabuFirst Published Dec 27, 2021, 2:34 PM IST
Highlights

வி.சி.க பிரமுகர் என அடயாளப்படுத்திக் கொண்டு தன்னைப் பற்றி ட்விட்டர் பக்கத்தில் கொலை மிரட்டல் விடுக்கும் ரீதியில் "வீடு புகுந்து வாயில் வெட்டுவேன்" என பதிவிட்ட தில்லை கருணாகரன் என்ற நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும், அந்த நபர் யார் என்பதைக் கண்டறிந்து உரிய நடவடிக்கையை காவல்துறை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
 

தன்னை வீடு புகுந்து வாயில் வெட்டுவோம் எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்து ட்விட்டர் பதிவிட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பத்தாண்டுகள் பிறகு திமுக ஆட்சி  பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் அரசு கொண்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கையையும் மக்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.  கொரோனா காலத்தில் அரசு செயல்பட்ட விதம் மற்றும் மழை வெள்ளத்தின் போது முதல்வர் உட்பட அரசு இயந்திரம் களத்தில் இறங்கி செயலாற்றியது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளானா அதிமுக, பாஜகவோ, அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக என விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதிமுகவைவிட ஒரு படி மேலே போய் பாஜக திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. சட்டமன்றத்தில் அதிமுக எதிர்க்கட்சி என்றாலும்கூட மக்கள் மன்றத்தில் பாஜகதான் எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் பாஜக முன்வைக்கும் விமர்சனங்களை திமுக பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை என்றாலும், அதன் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் பாஜகவி வைக்கும் ஒவ்வொரு விமர்சனத்திற்கும் பதிலடி கொடுத்து வருகிறது. ஏற்கனவே மனுஸ்மிருதியில் பெண்களை இழிவுபடுத்தியிருப்பதாக திருமாவளவன் கூறியதை மேற்கோள்காட்டி, திருமாவளவன் பெண்களை இழிவாக பேசிவிட்டார் என பாஜக பிரச்சாரம் செய்து வந்தது. அந்தவிவகாரத்தில் விடுதலை சிறுத்தைகளுக்கும் பாஜகவுக்கும் இடையே சமூகவலைதளத்தில் மட்டுமின்றி நேரடியாகவும் மோதல் ஏற்பட்டது. அதேபோல் இந்துக் கோவில்களில் உள்ளது சிலைகள் ஆபாசமாக உள்ளது என்றும் திருமாவளவன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படி பல்வேறு விஷயங்களில் விடுதலை சக்திகளுக்கும் பாஜகவுக்கும் நேரடி மோதல் இருந்து வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும்கூட மனுஸ்மிருதி விவகாரத்தில், தங்களுக்கு தேர்தல் முக்கியமல்ல, பாஜகவையும், சனாதானத்தையும் வேறருப்பதே முக்கியம் என முழங்கிய திருமாவளவன், தேர்தலையும் புறக்கணிக்க தயார் என்றும், ஒரு கை மோதி பார்த்துவிடலாம் என பாஜகவுக்கு சவால் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தான் பாஜக செய்தி தொடர்பாளரான திருப்பதி நாராயணனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது குற்றஞ்சாட்டி புகார் தெரிவித்துள்ளார். அதாவது தனது ட்விட்டர் மற்றும் முகநூல் போன்ற சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் தொடர்ந்து பல்வேறு அரசியல் ரீதியிலான விமர்சனைங்களை திருப்பதி நாராயணன் முன்வைத்து வருகிறார். இந்நிலையில் வி.சி.க-வைச் சேர்ந்தவர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட நபர் ஒருவர் தன்னை குறிப்பிட்டு வீடு புகுந்து வாயில் வெட்டுவேன் என கொலை மிரட்டல் பிடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாகவும், அந்த நபரைக் கண்டறிந்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாராயணன் திருப்பதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகார் அளித்தபின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, தி.மு.க மற்றும் வி.சி.க கட்சியைச் சேர்ந்த பலர் நாட்டின் பிரதமர் குறித்தும், பா.ஜ.க கட்சி மற்றும் நிர்வாகிகள் குறித்தும் தரம் தாழ்ந்த பதிவுகளை ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருவதாகவும், அது குறித்து ஆதாரங்களுடன் பல புகார்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். 

மாறாக பா.ஜ.க-வைச் சேர்ந்த கல்யாண ராமன், மாரிதாஸ் மற்றும் கிஷோர் கே ஸ்வாமி போன்றோர் மட்டும் குண்டர் சட்டங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது ஏன் என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், வி.சி.க பிரமுகர் என அடயாளப்படுத்திக் கொண்டு தன்னைப் பற்றி ட்விட்டர் பக்கத்தில் கொலை மிரட்டல் விடுக்கும் ரீதியில் "வீடு புகுந்து வாயில் வெட்டுவேன்" என பதிவிட்ட தில்லை கருணாகரன் என்ற நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும், அந்த நபர் யார் என்பதைக் கண்டறிந்து உரிய நடவடிக்கையை காவல்துறை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
 

click me!