CM Stalin: திடீரென இடிந்து விழுந்த கட்டிடம்.. உடனே நிதியுதவி.. மாற்று வீடுகள்.. அதிரடி காட்டும் முதல்வர்..!

Published : Dec 27, 2021, 02:21 PM IST
CM Stalin: திடீரென இடிந்து விழுந்த கட்டிடம்.. உடனே நிதியுதவி.. மாற்று வீடுகள்.. அதிரடி காட்டும் முதல்வர்..!

சுருக்கம்

சென்னை, திருவொற்றியூரில் அரிவாக்குளம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்புக் கட்டிடம் இன்று காலை இடிந்து விழுந்தது. இக்கட்டிடத்தில் மொத்தம் 24 வீடுகள் இருந்தன. அவை அனைத்தும் இடிந்து விழுந்து தரைமட்டமாயின. முன்னெச்சரிக்கையாக அலறியடித்துக்கொண்டு பொதுமக்கள் உடனே வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

சென்னை, திருவொற்றியூர் குடியிருப்பு கட்டிட விபத்தில் பாதிப்படைந்த 24 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை, திருவொற்றியூரில் அரிவாக்குளம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்புக் கட்டிடம் இன்று காலை இடிந்து விழுந்தது. இக்கட்டிடத்தில் மொத்தம் 24 வீடுகள் இருந்தன. அவை அனைத்தும் இடிந்து விழுந்து தரைமட்டமாயின. முன்னெச்சரிக்கையாக அலறியடித்துக்கொண்டு பொதுமக்கள் உடனே வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அனைத்து உடைமைகயைும் இழந்த பொதுமக்கள் நடுரோட்டில் கண்ணீருடன் தத்தளித்து  வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், பாதிக்கப்பட்டவர்களுக்க மாற்று வீடுகள் ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- திருவொற்றியூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் 1993-ல் கட்டப்பட்ட பழைய குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 24 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்து அதனால் மக்கள் பாதிப்படைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனை நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்துள்ளேன்.

விபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு உடனடியாக மாற்றுக் குடியிருப்புகள் வழங்கவும் அமைச்சரிடம் அறிவுறுத்தியுள்ளேன். பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்பிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்க 24 குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 1 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விவரங்களைச் சேகரிக்கவும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Deep Sleep Mode-க்கு சென்ற CM Vijay – உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
Breaking News: மஃப்டியில் வந்த அமைச்சர்.! ரூ.4,000 மாமூல் கேட்ட அர்ச்சகர்கள் - திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பு.!