நடிகை விஜயலட்சுமியின் உணவில் அவருக்கே தெரியாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை கலந்து கொடுத்து சீமான் கருச்சிதைவு ஏற்பட வைத்ததாக வீரலட்சுமி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் சீமானை வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக கூறிய நிலையில் அவர் ஆஜராகவில்லை.
அவரது வழக்கறிஞர் ஆஜராகி விளக்கமளித்தார். இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இது குறித்து பாதுகாப்பு தர வேண்டும் என தமிழர் முன்னேற்ற படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி கோயம்பேடு துணை கமிஷனரிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துவிட்டு பேட்டி அளித்தார்.
மாட்ட மட்டும் தான் அடக்க தெரியும்னு நினைச்சியா? மல்டி ஸ்டாராக கொடைக்கானலை கலக்கும் அண்ணாமலை
அப்போது அவர் கூறுகையில், விஜயலட்சுமிக்கு ஏழு முறை கருச்சிதைவு ஏற்படுவதற்கு சீமானே காரணம். அவர் உண்ணும் உணவில் கருச்சிதைவு மாத்திரங்களை கொடுத்து கரு சிதைவு செய்ய வைத்துள்ளார். சீமானுக்கு எங்கெல்லாம் சொத்து உள்ளது என்பது குறித்து ஆவணங்களை திரட்டி வருகிறோம். அது குறித்து உரிய நேரத்தில் புகார் அளிக்கப்படும்.
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தமிழ்நாட்டின் கெத்தை காட்டணும்.. முதல்வரே உடனே இதை செய்யுங்க.. ராமதாஸ்.!
நான் விஜயலட்சுமிக்கு ஆதரவாக இருப்பதால் நாம் தமிழர் கட்சியினர் தனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்து வருகின்றனர். வளசரவாக்கம் உதவி கமிஷனர் கவுதமன் தலையிட்ட பிறகு வழக்கின் நகர்வு மாறுகிறது. விஜயலட்சுமி பேச்சும் வேறு திசையில் செல்கிறது. உதவி கமிஷனர் கௌதமன் இந்த வழக்கில் தலையிடக்கூடாது என தெரிவித்தார்.