நானே பெரிய ரௌடி தான் . . . வெட்டிட்டு பொயிட்டே இருப்பேன் - சீமான் ஆவேசம்

By Velmurugan s  |  First Published Sep 15, 2023, 7:48 PM IST

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து நானே ரௌடி தான், வெட்டிட்டு பொயிட்டே இருப்பேன் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நடிகை விஜயலட்சுமி என்னுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். அவர் என் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அது தொடர்பாக நான் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். ஆனால், இந்த விவகாரத்திற்கும் வீரலட்சுமிக்கும் என்ன தொடர்பு?

Tap to resize

Latest Videos

வீரலட்சுமி இந்த விவகாரத்தில் தலையிட வேண்டிய அவசியம் என்ன? எனக்கு இன்னொரு முகம் இருக்கு என்று கூறும் வீரலட்சுமியின் தற்போதைய முகத்தையே பார்க்க முடியவில்லை. இதுல இன்னொரு முகம் வேறயா என்று கடிந்து கொண்டார். மேலும், நான் ஆவேசமடைந்தால் நாம் தமிழர் கட்சியே இருக்காது என்று வீரலட்சுமி கூறிய கருத்துக்கு, நான் யார் தெரியுமா?

மாவட்டச் செயலாளரின் காலில் விழுந்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி; புதுக்கோட்டையில் பரபரப்பு

நானே பெரிய ரௌடி இதே மாதிரி தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தால் கட்சியாவது, கிட்சியாவது என்று கூறிவிட்டு வெட்டிட்டு பொய்டுவேன் என ஆவேசமாக பேசினார். என்னை ஸ்கெட்ச் போட்டு தூக்குவேன் என்று கூறும் வீரலட்சுமியால் ஒரு ஸ்கெட்ச் பேனாவை தூக்க முடியுமா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

click me!