இப்போ லிப்டில் போனால் கூட பாதுகாப்பு இல்லை.. அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை சீண்டும் தமிழிசை..!

By vinoth kumarFirst Published Dec 3, 2022, 11:11 AM IST
Highlights

விமானத்தில் போனால் பாதுகாப்பு இல்லை என்று நினைப்போம். அப்புறம் காரில் போனால் பாதுகாப்பு இல்லை என்று நினைப்போம்.  ஆனால்,தற்போது லிப்டில் சென்றால் கூட பாதுகாப்பு இல்லாத சூழல் வந்துவிட்டது.

தற்போது லிப்டில் சென்றால்கூட பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என்று, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனை லிப்டில் சிக்கிக் கொண்டதை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கிண்டலாக கூறியுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஜெயகோபால் கரடியா விவேகானந்தா வித்தியாலயா பள்ளியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருமான  டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை செஸ் விளையாட்டு போன்றுதான் வாழ்கையும் முன்னேற வேண்டும் என்றால், சற்று பின்னோக்கி செல்ல வேண்டியது அவசியம் என்றார். 

இதையும் படிங்க;- ஆளுநர்கள் மக்களை சந்தித்தால் சிலருக்கு குளிர் காய்ச்சல் வந்துவிடுகிறது..! திமுகவிற்கு எதிராக சீறிய தமிழிசை

மேலும், பேசிய அவர் விமானத்தில் போனால் பாதுகாப்பு இல்லை என்று நினைப்போம். அப்புறம் காரில் போனால் பாதுகாப்பு இல்லை என்று நினைப்போம். ஆனால், தற்போது லிப்டில் சென்றால் கூட பாதுகாப்பு இல்லாத சூழல் வந்துவிட்டது என்று நினைக்கும் போது என்னடா இது வாழ்க்கை என்று தோன்றுகிறது. ஆக எல்லோரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். அதை கொடுப்பது தான் அரசாங்கத்தின் வேலை என்றார். சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் லிப்டில் சிக்கிக்கொண்டதை கிண்டல் செய்யும் விதமாக தமிழிசை பேசியுள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ஸ்டான்லி அரசு  மருத்துவமனை சிறப்பு மற்றும் அறுவை சிகிச்சை துறை கட்டிடத்தில் பல்வேறு திட்டங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துவிட்டு லிப்டில் இறங்கிய போது லிப்ட் திடீரென பாதியில் நின்றது. இதனையடுத்து அவசரகால கதவின் வழியாக அமைச்சர் உள்ளிட்டோர் மற்றும் மருத்துவர்கள் மீட்டக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க;-  மருத்துவமனை லிப்டில் சிக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்..! அவசரகால கதவு வழியாக வெளியேறியதால் பரபரப்பு

click me!