புதுவையும் அவுட்.. தென்னிந்தியாவில் இருந்தே துடைத்தெறியப்பட்ட காங்கிரஸ்..? அடித்து ஆடும் பாஜக..

By Ezhilarasan BabuFirst Published Feb 22, 2021, 12:58 PM IST
Highlights

புதுவையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துள்ளதன் மூலம் தென்னிந்தியாவில் இருந்தே காங்கிரஸ் ஆட்சி முற்றுலுமாக துடைத்தெறியப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

புதுவையிலும் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில் தென்னிந்தியாவில் இருந்தே காங்கிரஸ் ஆட்சி முற்றிலும் துடைத்தெறியபட்டிருக்கிறது. ஏற்கனவே உடகட்சி பூசலால் மாநிலங்களில் கட்சியை காப்பாற்றவே காங்கிரஸ் போராடி வரும் நிலையில், புதுவையில் ஆட்சி கவிழ்ந்திருப்பது தொன்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. 

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தொடர்ந்து ராஜினாமா செய்த நிலையில், அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதையடுத்து நாராயணசாமி தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார். அதற்காக இன்று புதுச்சேரி சட்டசபை சிறப்பு கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்து பேசினார். அப்போது, மத்திய அரசு தொடர்ந்து புதுவையை புறக்கணித்து வந்ததாக குற்றஞ்சாட்டினார். 

தொடர்ந்து  துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தொல்லை கொடுத்து வந்ததாகவும், ஆனால் அதை கடந்தும் ஆட்சியை நிறைவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். கொடுத்த 95% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகவும் அவர் தெரிவித்த அவர், மக்களுக்கு கொடுத்த வக்குறுதிகளில் 95 சதவீத த்தை நிறைவேற்றி விட்டதால் சிறப்பாக ஆட்சி செய்ததால் தனது அரசுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பெரும்பான்மை கொடுக்க வேண்டும் என்று கோரினார்.  ஆனால் அவருக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே நாராயணசாமி ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால், நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியில் முடிந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.இதனையடுத்து காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ளது. முதல்வர் நாராயணசாமியும் தனது முதலமைச்சர் பதிவுயை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து பேசிய எதிர்கட்சியினர் நாராயணசாமி தொடர்ந்து பொய் கூறி வந்ததாகவும், அதற்கு பலனாக அவரின் ஆட்சி கவிழ்ந்துள்ளது என்றும் கூறினர்.  

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் கடைசி பிரதமர் மன்மோகன்சிங் என்பது போல புதுவையில் காங்கிரஸ் ஆட்சியின் கடைசி முதல்வர் நாராயணசாமிதான் என்றனர். இது மட்டுமின்றி இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர்கள், புதுவையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துள்ளதன் மூலம் தென்னிந்தியாவில் இருந்தே காங்கிரஸ் ஆட்சி முற்றுலுமாக துடைத்தெறியப்பட்டுள்ளது என கூறியுள்ளனர். அதாவது தென் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, மற்றும் புதுவை ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் செல்வாக்கு மிகுந்த கட்சியாக இருந்து வருகிறது, கேரளா, கர்நாடகா, ஆகிய இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியை இழந்த காங்கிரஸ், இப்போது புதுவையிலும் கவிழ்ந்துள்ளது. ஏற்கனவே உட்கட்சி பூசலால் கட்சி கட்டெறும்பாக தேய்ந்து வரும் நிலையில், புதுவையில் ஆட்சி கவிழ்ந்திருப்பது தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சியை மேலும் பலவீனமடைய செய்யும் என கூறியுள்ளனர். பாஜக மிக தீவிரமாக கட்சியின் செல்வாக்கை விரிவுபடுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருப்பது ஆக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் மட்டமல்ல அக்கட்சி தலைமையையும் அதிர்ச்சயடைய வைத்துள்ளது.   

 

click me!