ரஜினியை திடீரென சந்தித்த கமல்..! காரணம் என்ன? நடந்தது என்ன?

By Selva KathirFirst Published Feb 22, 2021, 12:12 PM IST
Highlights

மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து 3 ஆண்டுகள் முடிந்து 4ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை கமல் சந்தித்தது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.

மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து 3 ஆண்டுகள் முடிந்து 4ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை கமல் சந்தித்தது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.

கடந்த சனிக்கிழமை காலை சுமார் பத்தரை மணிக்கு போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டிற்கு நடிகர் கமல் சென்று இருந்தார். இருவரும் சுமார் அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு கமல் செல்வதற்கு முன்னர் எந்த தகவலும்யாருக்கும் கொடுக்கப்படவில்லை. ஆனால் பேச்சுவார்த்த்தை முடிந்து கமல் வீடு திரும்பிய அரை மணி நேரத்திற்கு பிறகு கமல் தரப்பே ரஜினியை சந்தித்தது தொடர்பான தகவல்களை லீக் செய்தனர். ஆனால் இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை என்றும் கமல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால் உண்மையில் கமல் ரஜினியை சந்தித்தது இரண்டு விஷயத்திற்கு என்கிறார்கள். கடந்த சில நாட்களாக கமல் தொடர்பான தகவல்களை ஊடகஙகள் எதுவும் முக்கியத்துவம் கொடுத்து போடுவதில்லை. முன்பெல்லாம் கமல் தொடர்பான செய்திகளுக்கு அனைத்து ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்தன. ஆனால் தற்போது கமல் தொடர்பான முக்கிய  அறிவிப்புகள் வந்தால் கூட கமலின் பிஆர்ஒ டீமில் இருந்து தொடர்பு கொண்டு கேட்டால் மட்டுமே கடமைக்கு எறு ஊடகங்கள் செய்தியாக்குகின்றன. அத்தோடு கடந்த காலங்களில் கமல் கட்சிக்காக ஊடகங்களுடன் தொடர்பில் இருந்த பலரும் தற்போது கட்சி நடவடிக்கையில் அதிருப்தியில் உள்ளனர்.

எனவே அவர்களில் சிலர் செய்யும் உள்ளடி வேலைகளும் கமல் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வராமல் இருப்பதற்கு காரணம் என்கிறார்கள். இப்படி ஊடகங்களில் தனது முக்கியத்துவம் ஏதோ ஒரு காரணத்திற்காக குறைந்துள்ளதை கமல் உணர்ந்துள்ளார். இதனை சரி செய் ய அவர் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலன்அளிக்கவில்லை. இந்த நிலையில் தான் ஞாயிறன்று கமல் செய்தியாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது தொடர்பான அறிவிப்பும் 2 நாட்களுக்கு முன்னதாகவே செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதனை எந்த ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை.

 

மேலும் கமல் தனது பேட்டி குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்த பல்வேறு ஊடங்களில் இது தொடர்பான செய்திகள் வர வேண்டும் என்று எதிர்பார்த்தார். இதற்காக கமலின் பிஆர்ஓ டீம் எடுத்த முயற்சிகள் பலன்அளிக்கவில்லை. இந்த நிலையில் தான் பேட்டிக்கு முதல் நாள் ரஜினியை சந்தித்தால் செய்தியாளர் சந்திப்பின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தலாம் என்று கமலுக்கு யோசனை கூறியுள்ளனர். இதனை அடுத்தே ரஜினியை நேரில் சென்று சந்தித்துள்ளார் கமல். மேலும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் ரஜினியிடம் தேர்தலுக்கான ஆதரவையும் கமல் கோரியதாக சொல்கிறார்கள்.

ஆனால் ரஜினி அரசியல் தொடர்பான பேச்சிலேயே பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள். எனவே தான் சந்திப்பிற்கு பிறகு ரஜினியுடன் அரசியல் பேசவில்லை என்று கமல் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் கமல் எதிர்பார்த்தது போலவே அவரது செய்தியாளர் சந்திப்பிற்கு பெரிய அளவில் ஒரு எதிர்பார்ப்பை ரஜினியுடனான சந்திப்பு ஏற்படுத்தியது. ஆனால் செய்தியாளர் சந்திப்பில் கமல் பெரிய அளவில் எதையும் கூறாத காரணத்தினால் அதுவும் புஷ்வானம் ஆகிவிட்டது.

click me!