இப்போ போட்ட 2 டோஸ் 3 மாசம்தான் தாங்கும்.. பூஸ்டர் போட்டே ஆகணும்.. பகீர் கிளப்பும் ஆய்வு முடிவுகள்.

By Ezhilarasan BabuFirst Published Jan 25, 2022, 12:38 PM IST
Highlights

பூஸ்டர் டோஸ் ஒமைக்ரானுக்கு எதிராக 90 சதவீதம் வரை பயனுள்ளதாக இருக்கும்:-  ஒமைக்ரான் மற்றும் டெல்டாவிற்கு எதிராக பூஸ்டர் டோஸ் 90% வரை பயனுள்ளதாக இருக்கும் என இங்கிலாந்து ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய செலுத்தப்பட்டுள்ள முதல் மற்றும் இரண்டாவது டோஸ் மூலம் உருவான நோய் எதிர்ப்பு சக்தி 6 மாதங்களுக்குப் பிறகு குறைய தொடங்கும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. எனவே விரைந்து 3வது டோஸ் போடுவது அவசியம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நாட்டில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் வழங்கப்பட்டு 9 மாதங்கள் கழித்தே  பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது. தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட நோய்வாய்ப்பட்ட முதியவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்னணி பணியாளர்களுக்கு இந்த 3வது டோஸ் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால்  9 மாதம் என்ற இந்த கால இடைவெளியில் அதிகம்பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே 9 மாதம் என்ற இடைவெளியை மூன்று மாதங்களாக குறைக்க வேண்டும் என பல மாநிலங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளன.

சில நாட்களுக்கு முன்பு ஒரு இந்திய ஆய்வில் தடுப்பூசி போடப்பட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு கொரோனாவுக்கு எதிரான மக்கள் தொகையில் 30 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது என்றும், அவர்களில் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற தீவிர நோய்களால்  பாதிக்கப்பட்டுள்ளனர், இப்படிப்பட்ட நிலையில் அத்தகையவர்களுக்கு 9 மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ் கொடுக்க அரசு எடுத்துள்ள முடிவு சரியானது அல்ல எனவே அந்த இடைவெளியை 3 மாதமாக குறைக்க வேண்டுமென அந்த கடிதத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்காக பல ஆராய்ச்சிகளும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மத்திய அரசுக்கு இந்த கடிதம் எழுதியுள்ளன. இந்த இரு மாநிலங்களும் பூஸ்டர் டோஸ் எடுப்பதற்கான காலக்கெடுவை 9 மாதத்தில் இருந்து 6 மாதங்களாக குறைக்க கோரிக்கை வைத்துள்ளன. இதன்மூலம் தீவிரமான பாதிப்புகள் குறையும் என அம்மாநில அரசுகள் கருத்துகின்றன.

இந்தியாவில் தடுப்பூசியின் தாக்கம் 30% மக்களின் ஆறு மாதங்களுக்குப் பிறகு குறைந்துவிடுகிறது:- ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட AIG மருத்துவமனை மற்றும் ஏசியன் ஹெல்த்கேர் ஆகியவை தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆராய்ச்சி செய்துள்ளது, நாட்டில் கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி 6 மாதங்களுக்குப் பிறகு குறைந்துவிடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 பேரில் மூன்று பேருக்கு தடுப்பூசியால் உருவாக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியின் விளைவு ஆறுமாதங்களுக்கு பிறகு முடிவடைந்துவிடும் என ஏஐஜி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நாகேஷ்வர ரெட்டி கூறியுள்ளார். மேலும், தடுப்பூசி மூலம் உருவாக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியின் விளைவை அறிவதே இந்த ஆராய்ச்சியின் நோக்கம் என்றும், எந்த மக்களுக்கு பூஸ்டர் டோஸ் தேவை என்பதை கண்டறியவும், 40 வயதிற்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்களுக்கு 6 மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ் கொடுக்கலாம் என்பதேயும் இந்த ஆராய்ச்சியின் முடிவு காட்டுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

2. கோவிஷீல்ட் விளைவு மூன்று மாதங்களுக்குப் பிறகு குறையத் தொடங்குகிறது:- டிசம்பர் 21 நடந்த ஆராய்ச்சி ஒன்றில் அஸ்ட்ராஜெனேகா கோவி ஷீல்ட் தடுப்பூசியின் விளைவு மூன்று மாதங்களுக்கு பிறகு குறையத் தொடங்குகிறது என்று லான்செட் கூறியுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைத்து நபர்களும், இந்தத் தடுப்பூசியை அதிக அளவில் பயன்படுத்திய நாடுகளும் மூன்றாவது டோஸ் பூஸ்டர் டோஸ் ஆக எடுத்துக் கொள்வதை கருத்தில் கொள்ள வேண்டும் என லான்செட் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

3. ஆறு மாதங்களுக்கு மட்டுமே வைரஸில் இருந்து பாதுகாக்க முடியும்:- pifzer-bioNTech தடுப்பூசியில் மூன்றாம் கட்ட ஆய்வில் ஆறு மாதங்களுக்கு வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். kaiser permanente southern california  மற்றும் pfizer ஆகியவற்றின் ஆய்வில் பைசர் தடுப்பூசியை பயன்படுத்திய 6 மாதங்களுக்கு பிறகு 5 முதல் 6 மாதங்களுக்கு ஆன்டிபாடிகள் அளவு கணிசமாக குறைய தொடங்குவதாக ஆய்வில் தெரிவித்துள்ளது.

4. மெட்ரோவில் 90 சதவீத தொற்று நோய்களுக்கும் ஒமைக்ரான் காரணமாக உள்ளது:- நாட்டின் பெருநகரங்களில் 90% தொற்று என்பது ஓமைக்ரான் மாறுபாடு காரணமாக ஏற்படுகிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி இது மெட்ரோ நகரங்களில் டெல்டாவை மெதுவாக மாற்றுகிறது, ஐசிஎம்ஆர் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் சமிரன் பாண்டா கூறுகையில், மரபணு வரிசைமுறை தரவுகளின்படி நகரங்களில் ஒமைக்ரான் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக மாறியுள்ளது. டிசம்பர் 2021 4வது வாரத்தில் வரிசைப்படுத்தப்பட்ட மாதிரியில் 50% தோற்று ஒமைக்ரானாக உள்ளது. அதே நேரத்தில் இந்த ஆண்டு ஜனவரி 2வது மற்றும் 3வது வாரத்தில் வரிசை மாதிரியில் 90 சதவீதம் முதல் 15 சதவீதம் தொற்றுகள் ஒமைக்ரானில் இருந்து வரத் தொடங்கியுள்ளன.

5. பூஸ்டர் டோஸ் ஒமைக்ரானுக்கு எதிராக 90 சதவீதம் வரை பயனுள்ளதாக இருக்கும்:-  ஒமைக்ரான் மற்றும் டெல்டாவிற்கு எதிராக பூஸ்டர் டோஸ் 90% வரை பயனுள்ளதாக இருக்கும் என இங்கிலாந்து ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் US CDC யின் சமீபத்திய 3 ஆய்வுகளிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

click me!